பாகப்பிரிவினை பத்திரம்.. சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகளை 6 மாதத்தில் முடியுங்க.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளின் முழு சம்மதத்தோடு சமமாக தந்தையின் பூர்விக சொத்தை பிரித்து கொள்ளலாம். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளுக்கு பூர்விக சொத்தை சமமாக பிரிப்பதில் ஏதேனும் உடன்பாடு இல்லாவிட்டால் அந்த பாகப்பிரிவினையை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம். இப்படி பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருப்பது, பலரது கவனத்தை பெற்று வருகிறது.
பூர்வீக சொத்தை பிரித்து எழுதி வைப்பதன் பெயர்தான் பாகப்பிரிவினை.. அதாவது அப்பா வழி சொத்தில், வாரிசுகளுக்கு கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை.. இது குடும்பத்துக்குள்ளேயே செய்து கொள்ளும் சொத்து உடன்படிக்கை பத்திரமாகும். அதாவது சுயமாக சம்பாதித்த சொத்தினை உறுப்பினர்களுக்கு பிரித்து எழுதி வைப்பதாகும்.

குடும்ப உறுப்பினர்கள்
ஒரு சொத்தை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ, அதற்கு மேல் எவ்வளவு விருப்பமோ, அந்த அளவுக்கு பிரித்து, உரிமை மாற்றம் செய்யலாம்.. குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் இது நடக்கும்..
ஆனால், சொத்துக்களை சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக பிரிக்க வேண்டும்.. ஒருவேளை பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாக பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் பாகம் கிடைக்காதபட்சத்தில் அல்லது அவர்களில் யாருக்காவது ஒருத்தருக்கு ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில், அந்த பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம்.
அசையா சொத்துக்களான வீடு, மனை மற்றும் நிலம் ஆகியவற்றை பாகப்பிரிவினை செய்யும்போது, குடும்ப அங்கத்தினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போதுதான் நீதிமன்றம் செல்ல நேரிடுகிறது.
விடுதலை பத்திரம்
அதேபோல, தங்களுக்கு பாகப்பிரிவினை சொத்து வேண்டாம் என்று யாராவது சொன்னால், அவர்களிடமிருந்து விடுதலை பத்திரம் எழுதி வாங்கி கொள்ளலாம். இதனால் பல பிரச்சனைகளை பின்னாளில் தவிர்க்கலாம்.
பாகப்பிரிவினையை குடும்ப உறுப்பினர்களுக்கும், குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் எழுதி வைக்கலாம்... இதில், குடும்ப உறுப்பினர்களுக்கு, சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வதாக இருந்தால், முத்திரை தாள் கட்டணம் 1 சதவிகிதம் அதாவது அதிகபட்சமாக 25,000 ரூபாயும், பதிவுக்கட்டணமாக 1 சதவிகிதம் அதாவது அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.
பிரிக்க முடியாத சொத்து இருந்தால்?
பாகப்பிரிவினை என்றாலே எல்லோருக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஒருவருக்கு கூட ஒருவருக்கு குறைய இருக்கலாம் ஆனால் அதற்கு சரியான விளக்கம் பாகப்பிரிவினை பத்திரத்தில் இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாக பாகம் பிரித்துக் கொள்ளலாம். பிரிக்க முடியாததை பிரித்தால் மிக சிறிய பங்காகி விடும் என்று கருதினால் அதனை (NOT DIVISIBLE BY METES AND BOUNDS) அதாவது நீள அகலத்துடன் பிரிக்க முடியாத சொத்து என்று சொல்லபடுகிறது... பிரிக்க முடியாத சொத்தை யாராவது ஒருவர் யாருக்காவது விட்டு கொடுத்துவிட்டு அதற்கேற்ற பணத்தை பெற்று கொண்டு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து சொத்தில் இருந்து வெளியேறிவிடலாம்.
பிரிக்க முடியாத சொத்தை யாரும் யாருக்கும் விட்டு கொடுக்க மனமில்லாத சூழலில், அனைவரும் சொத்து எனக்குதான் வேண்டும் என்று சொல்லும்பட்சத்தில், அந்த சொத்தை பொது ஏலத்திற்கு தான் கொண்டு வர வேண்டும் அதில் வரும் தொகையை அனைவரும் பிரித்து கொள்ளலாம்.. ஆனால், ஒருவருக்கு மட்டும் அதில் மதிப்பு குறைவானதாக சொத்து கிடைத்தால் அந்த பாகபிரிவினையை எதிர்த்து கோர்ட்க்கு செல்லலாம்..
கோர்ட் வரை செல்கிறது
ஆனால், இந்தியாவை பொறுத்தவரை பாகப்பிரிவினை என்றாலே, சொத்து பிரச்சனைகளிலும், சலசலப்புகளிலும் போய் முடிந்துவிடுகிறது.. எவ்வளவுதான் திட்டமிட்டு செயல்பட்டாலும், பல நேரங்களில் சுமுகமாக பாகப்பிரிவினைகள் நடப்பதில்லை..
வாரிசுகளுக்குள் சிக்கல்களும், அதிருப்திகளும், ஏமாற்றங்களும், ஏற்படுவதால் விவகாரம் சிக்கலாகிறது. அத்துடன் நீதிமன்றம் வரை விவகாரம் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. அதிலும் இதுபோனற் வழக்குகளில் உடனடியாக தீர்வும் முடிவும் கிடைப்பதில்லை.. இதனால் தமிழகம் முழுவதும் பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகள் அதிகமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
ஹைகோர்ட் உத்தரவு
இப்படிப்பட்ட சூழலில்தான், சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கையையும் அனுப்பி வைத்திருக்கிறது.. அதில், சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications