வந்தே பாரத் ரயில்களில் உலகத் தர வசதி.. ரயில்வே முடிவு.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
சென்னை: வந்தே பாரத் ரயில்களில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தெற்கு ரயில் புதியதொரு திட்டத்தை கையில் எடுக்கிறது.
ரயில் பயணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் பயணிக்க ஏதுவாக இந்திய ரயில்வே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வந்தே பாரத் எனும் அதி விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட புல்லட் ரயில் வேகத்தில் செல்லும் இந்த ரயிலில் பயணிக்க நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகம் இருந்தாலும் பாதுகாப்பு விஷயம் இருப்பதை கருத்தில் கொண்டு மக்களும் இதில் பயணிக்க விரும்புகிறார்கள். இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களில் யாத்ரி சேவை அனுபந்த் எனும் திட்டத்தை தொடங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
உலகம் தரம் வாய்ந்த இந்த திட்டத்தின் மூலம் ரயில் பயணிகளின் சேவையை மேம்படுத்துவது ஆகும். இதன் மூலம் ரயில்வே தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஆரம்ப கட்டமாக வந்தே பாரத் ரயில்களின் 6 ஜோடி ரயில்களுக்கு இந்த திட்டம் சோதனை முயற்சியாக செய்யப்படுகிறது.
இது வெற்றி அடைந்தால் மற்ற ரயில்களுக்கும் இந்த திட்டம் பரவலாக்கப்படும். ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தின் மூலம் செலவுகளை குறைக்கவும் இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் தூய்மை பணி மற்றும் உணவு தயாரிக்கும் பணிகளில் குறைந்தபட்சம் 900 பேர் ஈடுட்டனர். இதன் மூலம் ரூ 120 கோடி வருவாய் கிடைத்தது.
ஒவ்வொரு ரயிலிலும் உணவு மற்றும் நீராகார (டீ,காபி, கூல்டிரிங்ஸ்) தேவைகளுக்காக பிரத்யேகமாக ஒருவர் பணியமர்த்தப்படுவர். யாத்ரி சேவை அனுபந்த் திட்ட மேலாளராக நியமிக்கப்படுபவர், விருந்தோம்பல் துறையில் மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல்-மைசூர், சென்னை எழும்பூர் -திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் -கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு மற்றும் சென்னை சென்ட்ரல் -விஜயவாடா ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் இது ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications