மின்சார ரயிலில் திடீரென கிளம்பிய புகை.. சென்னை கிண்டி ஸ்டேஷனில் அலறியடித்து ஓடிய மக்கள்! ஷாக்
சென்னை: சென்னை கிண்டி ரயில்வே ஸ்டேஷனில் மின்சார ரயிலின் பெட்டியில் இருந்து குபுகுபுவென வந்த புகையால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் பின்னணி காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த ரயிலில் தினமும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் மின்சார ரயிலின் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்றும், நாளையும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்றைய தினம் தண்டவாள பராமரிப்பு பணியை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு மின்சார ரயில் இயங்க தொடங்கியது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து குபுகுபுவென புகை கிளம்பியது.
இதையடுத்து உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ரயில் நிறுத்தப்பட்டது. புகை வந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி ரயிலில் இருந்து வேகமாக இறங்கி ஓடினர். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து புகை வந்த பெட்டியை ஆய்வு செய்தனர்.
அப்போது ரயிலின் பிரேக் பாயிண்ட் பகுதியில் திடீரென ஏற்பட்ட பழுதால் புகை கிளம்பியதும், அதிர்ஷ்டவசமாக தீவிபத்து எதுவும் ஏற்படாததும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு ரயில் பெட்டியின் பிரேக் பாயிண்ட்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர். இதையடுத்து மீண்டும் அந்த ரயில் அங்கிருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புகை காரணமாக ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீண்டும் பெட்டிகளில் ஏறி அமர்ந்த நிலையில் தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் 15 நிமிடங்கள் தாமதாக புறப்பட்டது. முன்னதாக இந்த சம்பவம் காரணாக கிண்டி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications