சென்னை வழியாக வந்த ரயில்.. 3 நாட்களாக பூட்டி கிடந்த கழிவறை.. திறந்து பார்த்தால் "ஷாக்" ட்விஸ்ட்!
சென்னை: ராஞ்சியில் இருந்து அரக்கோணம் வழியாக கேரளா செல்லும் விரைவு ரயிலில் மூன்று நாட்களாக கழிவறை பூட்டப்பட்டு இருந்தது. இதனால் கழிவறையின் கதவை உடைத்தனர். அப்போது உள்ளே இருந்த பயணியைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வட இந்தியாவில் இருந்து தென் மாநிலங்களுக்கும் பல்வேறு ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வருகை தருகிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுமான தொழில்கள் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வருவதை பார்க்க முடியும். கோவை, திருப்பூரில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக வட மாநில தொழிலாளர்கள் பலரும் வட மாநிலங்களில் இருந்து வருகை தருகிறார்கள்.
வட இந்தியாவில் பயணிக்கும் வடமாநில தொழிலாளர்களில் சிலர் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க டிக்கெட் எடுத்து விட்டு ரிசர்வ் கோச்களில் ஏறிவிடுவதாகவும் பயணிகள் தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் டிக்கெட்டே எடுக்காமல் சீட்களை வந்து ஆக்கிரமித்து விடுவதாகவும் சில பயணிகள் அவ்வப்போது ஆதங்கத்துடன் கூறும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து அரக்கோணம் வழியே எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் ஸ்லீப்பர் கோச் பெட்டியில் கழிவறையில் இருந்தே 3 நாட்களாக வட மாநில தொழிலாளி பயணித்துள்ளார். ரயிலின் கழிவறை பூட்டி கிடந்து இருப்பதை பயணிகள் பார்த்துள்ளனர். யாராவது இயற்கை உபாதை கழிக்க சென்று இருப்பார்கள் என பயணிகள் நினைத்துள்ளனர்.
ஆனால், கிட்டத்தட்ட 3 நாட்களாக கழிவறை பூட்டி கிடந்ததால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்ககூடுமோ என பயணிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இயற்கை உபாதை கழிக்க சென்ற யாராவது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உள்ளே சிக்கிக் கொண்டார்களா? அல்லது வேண்டும் என்றே உள்ளே இருக்கிறார்களா என தெரியாததால் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசாரும் கழிவறை கதவை உடைத்து திறந்து பார்த்த போது அவர்களுக்கு சற்று அதிர்ச்சிதான் காத்திருந்தது. ஏனெனில் டிக்கெட் எதுவும் எடுக்காமல் ஸ்லீப்பர் பெட்டியின் கழிவறையில் 3 நாட்களாக வடமாநிலத்தை சேர்ந்த நபர் பயணம் செய்துள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் ஜார்க்கண்டை சேர்ந்த சோபன் தாஸ் (18) என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications