ரயிலில் அன்ரிசர்வ்டு டிக்கெட்டை கூட கேன்சல் பண்ணலாம்.. யூடிஎஸ் செயலி இருக்கா? எப்படின்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டை யூடிஎஸ் செயலி புக் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த செயலி வாயிலாக எடுத்த முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்துகொள்ளும் வசதி உள்ளது. யூடிஎஸ் செயலியில் இதை எப்படி கேன்சல் செய்ய முடியும் என்பது பற்றியும் எவ்வளவு பணம் ரீஃபண்ட் ஆக கிடைக்கும் என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்க்லாம்.

தொலை தூரங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்வது போல, முன்பதிவில்லா டிக்கெட்டுகளை யூடிஎஸ் என்ற செயலி மூலம் பயணிகள் எடுத்துக்கொள்ள முடியும். அதேபோல லோக்கல் ரயிலுக்கான டிக்கெடுகளையும் யுடிஎஸ் செயலி வாயிலாக பயணிகள் எடுத்துக்கொள்ள முடியும்.

Rail IRCTC UTS App


டிக்கெட் முன்பதிவு: ரயில் டிக்கெட் கவுண்ட்டரில் கால் கடுக்க நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு நேராக ரயிலில் ஏறி சென்று விடலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட சில தொலைவு வரை நின்றால் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

பேப்பர்லெஸ் டிக்கெட்: இது பயணிகளுக்கு பெரிதும் பயனளிப்பதாக உள்ளது. யுடிஎஸ் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை இரண்டு வகையில் எடுக்கலாம்.. பேப்பர்லெஸ் டிக்கெட் மற்றும் பேப்பர் டிக்கெட் என்ற இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. பேப்பர்லெஸ் டிக்கெட் என்றால், டிக்கெட்டை எடுத்த பிறகு தனியாக பிரிண்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யுடிஎஸ் செயலியை ஓபன் செய்தால் டிக்கெட்டை பார்க்க முடியும். டிடிஆர் கேட்கும் போது இந்த டிக்கெட்டை காண்பிக்கலாம்.

தூத்துக்குடி- நெல்லை பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! பாலருவி எக்ஸ்பிரஸ் வந்ததும் இப்படி ஒரு முடிவா


பேப்பர் டிக்கெட்: அதேபோல பேப்பர் டிக்கெட் என்றால் யுடிஎஸ் செயலியில் டிக்கெட் எடுத்தாலும் கூட ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்திலோ அல்லது கவுண்டரிலோ காட்டி டிக்கெட் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி பிரிண்ட் செய்த டிக்கெட் கைவசம் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் பேப்பர்லெஸ் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது.

ஒரு மணி நேரத்திற்குள்: ஆனால், பேப்பர் டிக்கெட்டை கேன்சல் செய்யலாம். டிக்கெட்டை புக் செய்துவிட்டு வேண்டாம் என நினைத்தால், மெஷினில் பிரிண்ட் செய்யும் முன்பாக டிக்கெட்டை ரத்து செய்து கொள்ளலாம். ஒருவேளை டிக்கெட்டை இயந்திரத்தில் பிரிண்ட் செய்து விட்டால் ஒரு மணி நேரத்திற்குள் கவுண்டரில் கொடுத்து ரத்து செய்து கொள்ளலாம். ஆனால், இந்த டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம் கையில் கிடைக்காது. ரயில்வே வேலட்டில் தான் ரிஃபண்ட் செய்யப்படும்.

25 கோடி அப்பே! கேரளாவில் விறு விறுப்பாக நடக்கும் "ஓணம் பம்பர் லாட்டரி.." குலுக்கல் எப்போது?


எப்படி கேன்சல் செய்யவேண்டும்?: இந்த ஆப்ஷனை பயன்படுத்த யுடிஎஸ் செயலியில் பேப்பர்லெஸ் டிக்கெட் புக் செய்த பயணிகள் கேன்சல் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்த டிக்கெட் கேன்சல் செய்ய உகந்ததா என்பதை காட்டும். அதாவது ரூ.30 ரூபாய்க்கு குறைவான விலையில் டிக்கெட் இருந்தால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது.

இதனால், கேன்சல் டிக்கெட் என்ற ஆப்ஷன் காட்டது. ஆகவே 30 ரூபாய்க்கு மேல் உள்ள டிக்கெட் என்றால் மட்டுமே கேன்சல் செய்ய முடியும். கேன்சல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும் புதிய பாப் அப் ஒன்று திரையில் தோன்றும். அதில் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்ற விவரம் தெரிய வரும் அதாவது ரூ. 45 டிக்கெட் எடுத்து இருந்தால் 30 பிடித்தம் போக ரூ.15 ரீபண்ட் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+