சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு.. அலுவலகம் செல்லும் பயணிகள் தவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் பற்றி தனியாக சொல்ல தேவையில்லை. அதுவும் காலை மற்றும் மாலை பீக் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக அதிக அளவில் இருக்கும். சாலைகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். இதனால், அலுவலகம் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியுமா? ஒரு வித பதற்றத்தில் தான் பயணிக்க வேண்டியிருக்கும்.

passengers suffer as technical snag hits metro service in chennai

இதனால், பயணிகள் மெட்ரோ ரயில் ரயில்களையும் தற்போது அதிக அளவில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இதனால், தற்போது மெட்ரோ ரயில்களிலும் நிற்க கூட முடியாத அளவுக்கு கடுமையான கூட்டம் காணப்படுகிறது. 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டம் பீக் நேரங்களில் அதிகமாகவே இருப்பதை காண முடிகிறது. இந்த நிலையில், இன்று காலை சென்னை மெட்ரோ ரயில் சேவை திடீரென பாதிக்கப்பட்டது.

சென்னை விம்கோ நகர் முதல் செண்ட்ரல் வழியாக சென்னை விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாதாதல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாதாதல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். விமான சேவை ஒரு மணி நேரத்தில் சேவை சீராகும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பீக் நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்காலிகமாக விம்கோ நகர் முதல் சின்னமலை வரையில் நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரையில் லூப் லைனில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் மெட்ரோ தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+