Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை சதாப்தி ரயிலுக்குள் அருவி போல கொட்டிய மழை.. இதுதான் சொகுசா? திட்டி தீர்த்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சொகுசு ரயில் பயணம் ரணமான பயணமாக மாறிவிட்டதாக பயணிகள் ஆதங்கப்பட்டனர். ரயிலுக்குள் மழை நீர் ஒழுகும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு சதாப்தி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு செல்கிறது. சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவைக்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.

passengers-suffered-as-rain-water-leaks-into-the-coimbatore-bound-shatabdi-express-train

மறுமார்க்கத்தில் கோவையில் 3.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை செண்டிரல் ரயில் நிலையத்திற்கு இரவு 10.15 மணிக்கு வந்து சேரும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது.

சதாப்தி எக்ஸ்பிரஸ்: தினசரி இயக்கப்படும் இந்த ரயில், முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது ஆகும். சொகுசு ரெயில் என்பதால், கோடை வெயிலில் நிம்மதியாக பயணம் செய்ய பயணிகள் பலரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலிலை பயன்படுத்தி வருகின்றனர். கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் ஏசியில் பயணிக்க முடியும் என்பதால் இந்த ரயிலை கோடை காலத்தில் பயணிகள் அதிகம் விரும்பி செல்கிறார்கள்.

பயணிகள் அவதி: இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று சென்னையில் இருந்து கோவை நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் கோவை பீளமேடு அருகே ரெயில் செல்லும் போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. பயணிகளும் மழையை ரசித்துக் கொண்டு இருந்தனர். திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் உள்ள பயணிகள் மட்டும் மழையால் அவதிக்குள்ளாகினர்.

passengers-suffered-as-rain-water-leaks-into-the-coimbatore-bound-shatabdi-express-train

அருவி போல் ஒழுகியது: அதாவது, ரயிலின் 'சி - 7' பெட்டியில் திடீரென மழை நீர் ஒழுகியது. ரயில் பெட்டியில் இருந்த மின்விளக்கின் மேற்புற பகுதியில் இருந்து தண்ணீர் அருவி போல கொட்டியது. இதனால், அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரயிலுக்குள் மழை நீர் ஒழுகிய காட்சிகளை சில பயணிகள் வீடியோ எடுத்து தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

ரயில்வே அதிகாரிகள் விளக்கம்: இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள், 'சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் மட்டுமே மழைநீர் ஒழுகியது. சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னை வந்ததும் குறிப்பிட்ட ரயில் பெட்டியின் பழுது சரிசெய்யப்படும்' என்றார்.

பயணிகள் கொதிப்பு: சென்னையில் இருந்து கோவைக்கு சதாப்தி ரயிலில் பயணிக்க பயணி ஒருவருக்கு 1,370 ரூபாய் கட்டணமும் EC கோச்சில் 2085 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் அதிகமாக இருந்தாலும் சொகுசாக பயணம் செய்யலாமே என்றால் ரயிலை மோசமாக பராமரித்து பயணிகளுக்கு இன்னலை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்துவதாகவும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+