மூச்சுவிட முடியலையே.. சென்னை-குமரி எக்ஸ்பிரஸில் முன்பதிவு பயணிகளுக்கு நேர்ந்த சோகம்.. ரொம்ப மோசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த பயணிகள் நரக வேதனையை அனுபவித்துள்ளனர். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் பொதுமக்களிடம் ரயில் பயணத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறைந்த செலவில் நீண்டதூர பயணம் செய்ய ரயில்வே வாய்ப்பு வழங்குவது தான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் சமீபகாலமாக ரயில் பயணத்தில் பயணிகள் அதிக இடையூறுகளை சந்தித்து வருகின்றன.

railway indian railway

மழை பெய்யும்போது ரயில் பெட்டிகளில் தண்ணீர் கசிவது, முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பயணிகள் ஏறிக்கொள்வது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பொதுமக்கள் ஏறி பயணிப்பது அதிகம் நடக்கும்.

ஆனால் சமீபகாலமாக தென்மாநிலங்களிலும் இந்த காலசாரம் என்பது பரவி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா, கேரளா, தமிழகத்திலும் பல ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி மக்கள் ஏறி பயணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் அதிக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

railway indian railway

இந்நிலையில் தான் அதேபோன்ற சம்பவம் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இப்போது நடந்துள்ளது. அதாவது நேற்று மாலையில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பக்ரீத் பண்டிகையையொட்டி 2 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊர் செல்ல இந்த ரயிலில் பயணித்தனர். இதனால் வழக்கத்தை விட அதிகளவில் ரயிலில் கூட்டம் இருந்தது.

இதனால் முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பொதுபெட்டிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பலருக்கும் ரயிலில் ஏறி பயணிக்க முடியாத நிலை உருவானது. இதனால் வேறு வழியின்றி பயணிகள் சொந்த ஊர் செல்லும் ஆர்வத்தில் உரிய டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டிகளில் ஏறிக்கொண்டனர். ரயில் பெட்டியில் வாசல், கழிவறை முதல் அனைத்து இடங்களையும் அவர்கள் ஆக்கிரமித்து கொண்டனர்.

இதனால் முன்பதிவு பெட்டியில் கூட்டம் அலைமோதியது. அதோடு முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் முன்பதிவு செய்து பயணித்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் கூட முன்பதிவு செய்யாத பயணிகள் ரயிலில் இருந்து இறங்க மறுத்துவிட்டனர். இதனால் முன்பதிவு செய்த பயணித்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்க தொடங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பயணிகள் கூறுகையில், ‛‛தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் அதிகமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்கின்றனர்.

இந்த வேளையில் பயணிகள் வசதிக்காக சிறப்புரயில்கள் இயக்கினால் நன்றாக இருக்கும். ஆனால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் தான் முன்பதிவு பெ்டடிகளில் பொதுமக்கள் ஏறி பயணிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு ரயில்வே நிர்வாகம் முடிவு கட்ட வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+