Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தில் திண்டாடும் பயணிகள்! டிக்கெட் கிடைக்க இதுதான் வழி.. போக்குவரத்து கழகம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை என கூறி பயணிகள் போராட்டம் செய்த நிலையில் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து இதற்கு அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்தால் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு தேவைக்கு தகுந்தபடி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு நேரங்களில் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள வருவதால் தவிர்க்க முடியாத சிரமம் ஏற்படுகிறது என்றும், எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www/tnstc.in என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

passengers-will-not-face-congestion-if-they-make-reservations-tamil-nadu-government-express-bus-co

பேருந்துகள் இல்லை என புகார்

முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுவாகவே சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதும். ஆனால் அதற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குவதில்லை என பயணிகள் குற்றச்சாடு வைத்து வருகின்றனர்.

கடந்த 4 ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், போதிய பஸ்கள் வராததால் வரும் ஓரிரு பஸ்களில் ஏற பயணிகள் முண்டியத்துக்கொண்டு ஜன்னல் வழியாக ஏறுவது போன்ற வீடியோவும் இணையத்தில் பரவி இருந்தது. கைக்குழந்தைகளோடு வந்தவர்கள் போதிய பஸ் இல்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தன.

சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக விளக்கம்

இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டிய நிலையில், கடந்த 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் கூறியிருப்பதாவது:-

* சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, கும்பகோணம், தூத்துக்குடி, கோவை, சேலம் ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு முன்பதிவு அடிப்படையில் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
* கடந்த 4 ஆம் தேதி(புதன்கிழமை) தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட்டு 73 ஆயிரத்து 480 பயணிகளும், 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) கூடுதலாக 622 பேருந்துகள் இயக்கப்பட்டு 96 ஆயிரத்து 690 பயணிகளும் மற்றும் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 798 பேருந்துகள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 6 ஆயிரத்து 205 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

முன்பதிவு செய்ய கோரிக்கை

* சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு 94 ஆயிரத்து 926 முன்பதிவு இருக்கைகள் உள்ள நிலையில் 26 சதவீத இருக்கைகள் மட்டுமே கடந்த 3 நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
* முன்பதிவு வசதி உள்ள அரசு பேருந்துகளில் அதிகபட்சமாக 9 சதவீதம் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்தால், பேருந்து நிலையங்களில் தேவையற்ற விவாதங்கள், முண்டியடித்து ஏறுதல் மற்றும் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதை அறவே தவிர்க்கப்படும்.

* இதேபோன்று நள்ளிரவு நேரங்களில் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள வருகை புரிவதால் பயணிகளுக்கு தவிர்க்க முடியாத சிரமம் ஏற்படுகிறது. எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www/tnstc.in என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* பயணிகள் முன்பதிவு செய்யும்பட்சத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்கிட வழிவகை செய்யப்படும். எனவே, பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+