பாஸ்போர்ட் சேவா இணையதளம் முடக்கம்.. 4 நாட்களுக்கு இயங்காது! இதுதான் காரணமாம்!
சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க, நாடு முழுவதும் உள்ள மையங்களில் அப்பாயின்மெண்ட்டை பதிவு செய்ய பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் passportindia.gov.in பயன்படுத்தப்படுகிறது.

பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் பதிவு செய்து அப்பாயின்மெண்ட் பெற்றுள்ள நாளில் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்குச் சென்று ஆவணங்களை வழங்கவேண்டும். இந்த முறை கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவா இணையதள சேவையானது வரும் திங்கட்கிழமை காலை வரை பயன்பாட்டில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதியான நேற்று இரவு 8 மணி முதல் பாஸ்போர்ட் சேவை இயங்கவில்லை. வரும் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவா இணையதள சேவை பயன்பாட்டில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் சேவா இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட தேதிகளில் பாஸ்போர்ட் சேவா இணையதள பயன்பாட்டை, குடிமக்கள் மட்டுமல்லாமல் வெளியுறவு விவகார அதிகாரிகள், பாஸ்போர்ட் பணியக அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாஸ்போர்ட் சேவா இணையதள சேவைகள் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நாட்களில் அப்பாய்ன்மென்ட் பெற்றவர்களுக்கு வேறொரு தேதி வழங்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications