Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா மாறுதல் செய்யணுமா? மோசடி பத்திரத்தை யார் ரத்து பண்ணலாம்? பழைய சிஸ்டமே வருதா? தமிழக அரசு முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டா மாறுதலில், பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை மீண்டும் தமிழகத்தில் வலுப்பெற துவங்கியிருக்கிறது. இதுகுறித்து தமிழக வருவாய் துறை அலுவலர் சங்கம் முக்கிய தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருக்கிறது.

பட்டா என்பது வீடு அல்லது நிலத்தை சொந்தமாக வைத்திருப்பவர்கள் பெற்றிருக்கும் ஆவணமாகும். நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் இந்த ஆவணத்தை, வருவாய் துறை நேரடியாக வழங்கும்.

patta change deed registration tamil nadu government

ஆவணங்கள்: இந்த பட்டாவில் நிலத்தின் உரிமையாளர் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் இருக்கும். இந்த பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால், பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை உரிமையாளர்கள் பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகே பட்டா மாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்படும்.

இதற்கான ஆவணங்களுடன், அருகிலுள்ள அரசு இ சேவை மையம் அல்லது கிராம நிர்வாக அலுவலகம் சென்று விண்ணப்பம் செய்தாலே போதும். இதற்கு 60 ரூபாய் செலவாகும். பாகப்பிரிவினை பத்திரத்தை கொண்டு வாரிசுகள் தனித்தனியாக பட்டாக்களை, அவரவர் பெயரில் விண்ணப்பித்து, அவரவர் பெயரிலேயே பட்டா வாங்கிக் கொள்ளலாம்.

வழிவகைகள்: இப்படி பட்டா மாறுதலில் பல்வேறு வழிவகைகள் பின்பற்றப்பட்டு வரும்நிலையில், பட்டா மாறுதலை செய்யக்கூடிய அதிகாரம் யாரிடமும் உள்ளது என்பது குறித்த சலசலப்பு நீடித்தபடியே வருகிறது.

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள், ஏதாவது கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் ஹைகோர்ட்டுக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்த நிலையில், இந்த நடைமுறையில் கடந்த 2022-ல் மாற்றம் வந்தது..

பத்திரப்பதிவு:
அதன்படி, எங்காவது மோசடி தென்பட்டால், பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச்சட்ட மசோதா, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 77ஏ மற்றும் 77பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக வருவாய் துறை அலுவலர் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.. அச்சங்கத்தின் தலைவர் முருகையன் தலைமையில் இந்த கூட்டம் நடந்துள்ளது. அப்போது, பட்டா மாறுதலில் பழைய முறை பின்பற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இக்கூட்டத்தில் இயற்றப்பட்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் இவைதான்:

தீர்மானங்கள்:

- ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழுச்சொத்தும் கைமாறும் நிலையில், அதற்கான பட்டா பெயர் மாற்றம் செய்யும் அதிகாரம், தலைமையிடத்து துணை தாசில்தாருக்கு அளிக்கப்பட்டு உள்ளது.. இதை ரத்து செய்து, பழைய நடைமுறையின்படி, மண்டல துணை தாசில்தாருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

- மக்களுடன் முதல்வர், உங்களை தேடி உங்கள் ஊரில், முதல்வரின் முகவரி உள்ளிட்ட திட்டங்களில் பெறப்படும் மனுக்கள் மீது தீர்வு காண, உரிய அவகாசம் அளிக்க வேண்டும். திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கி, வருவாய் துறை அலுவலர்களுக்கு, அதீத பணி நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

- பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.. திருநெல்வேலி கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து, முதல்வரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

- வருவாய் துறை அலுவலர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திருநெல்வேலியில் நடந்த சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+