பட்டா மாறுதல், பெயர் மாற்றம், கட்டணம், தமிழக அரசு வசதிகள்! ஆன்லைன், தாலுகா மூலம் செய்வது அவசியம்
சென்னை: தமிழகத்தில் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்துக்கு சம்பந்தப்பட்ட பட்டா விவரங்களில் பிழைகள் இருந்தால், அதனை உடனே திருத்திக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. நில உரிமையாளரின் பெயர், பரப்பளவு, சர்வே நம்பர் போன்றவற்றில் தவறுகள் இருந்தால் அதெல்லாம் சட்ட ரீதியான பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்... எனவே அவைகளை எப்படி திருத்தம் செய்வது, பட்டா எப்படி வாங்குவது என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நிலம் வாங்கியதுமே, அதற்கான பட்டாவை வாங்குபவரின் பெயருக்கு மாற்றாமல் வைத்தால் வங்கி கடன், சொத்து விற்பனை மற்றும் அரசு திட்டங்களில் சிக்கல்கள் ஏற்படும்.. எனவேதான் பட்டா என்ற அதிகாரப்பூர்வ ஆவணம் அவசியமாகிறது..

பட்டா பெயர் மாற்றம்
பட்டா திருத்தம் அல்லது பெயர் மாற்றம் செய்ய, சில முக்கிய ஆவணங்கள் தேவையாகின்றன. முதலில் பழைய பட்டா நகல், தற்போதைய பட்டா நகல், சிட்டா, அடங்கல், நிலவரி ரசீடு, வில்லங்க சான்றிதழ் போன்றவை எல்லாம் கையில் ரெடியாக வைத்திருக்க வேண்டும்.
நிலத்தின் நிலைமையைப் பொறுத்து, பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், விடுதலைப்பத்திரம் மற்றும் பரிவர்த்தனை பத்திரம் போன்றவற்றையும் இணைக்க வேண்டும்.
தமிழக அரசின் வசதிகள்
விண்ணப்பதாரரின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ், குடியிருப்பு சான்றிதழ், தேவையானால் வாரிசு சான்றிதழ் அல்லது இறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும்.
பட்டா மாற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பங்களை தாலுகா அலுவலகம், விஏஓ ஆபீஸ் அல்லது தமிழ்நாடு e-சேவை இணையதளம் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்திற்கு முதலில் இணையதளத்தில் பெயர், மொபைல் நம்பர், வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, ஐடி, பாஸ்வேர்டு கொண்டு நுழைய வேண்டும்.
பிறகு உட்பிரிவு இல்லாத நிலம் அல்லது உட்பிரிவு உடன் நிலம் என்பதை தேர்வு செய்து, பிழையான விவரம் மற்றும் சரியான விவரம், தேவையான ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டா மாறுதல் கட்டணம்
பட்டா மாறுதலுக்கான கட்டணத்தில் உட்பிரிவு இல்லாத நிலங்களுக்கு ரூ.60, உட்பிரிவு உடன் நிலங்களுக்கு ரூ.600 வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தியதும் விண்ணப்பித்த விவரங்கள் மெசேஜ் மூலம் விண்ணப்பதாரரின் செல்போன் நம்பருக்கு வந்துவிடும்.. விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்துமே, விஏஒ, சர்வேயர், வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தை நேரில் ஆய்வு செய்வார்கள்.. பிழை உறுதி செய்யப்பட்டால், தாசில்தார் உத்தரவினை வழங்குவார். அதன்பிறகு புதிய திருத்தப்பட்ட பட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பெற முடியும்.
சில நேரங்களில் இந்த நடைமுறை சில நாட்கள் எடுக்கும்; அதனால் விண்ணப்பிக்கும் முன் தேவையான அனைத்து ஆவணங்களும் முழுமையாக இருக்க வேண்டும். நிலம் எந்தவொரு சட்ட வழக்கிலும் சிக்கியிருக்கக்கூடாது.
தாலுகா ஆபீஸ்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது மொபைல் நம்பர் கட்டாயமாகும்.. இதனை சரியாக செய்யும் போது சொத்து உரிமை, சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ பதிவுகள் உறுதியாகும் என்பதால் நில உரிமையாளர்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நிலம் இணையதளம் மற்றும் தாலுகா அலுவலகம் வழியாக பட்டா திருத்தம், பெயர் மாற்றம் போன்ற செயல்முறைகள் எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடியும். பிழை தவிர்க்கப்பட்டு, அனைத்து ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டால், பட்டா மாறுதலின் செயல்முறை சீராக நடக்கும்...
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications