அமெரிக்காவில் உண்மையில் நடந்தது இதுதான்.. சின்ன புத்தி இல்லை.. பட்டிமன்றம் ராஜா முழு விளக்கம்
சென்னை: அமெரிக்காவில் உணவு உபசரித்த தமிழ் பெண்ணிடம் சாதியைக் கேட்டதாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ள பட்டிமன்றம் ராஜா, மற்றொரு நபர் பகிர்ந்த பேஸ்புக் பதிவு குழப்பத்திற்கும், தவறான விளக்கத்திற்கும் வழிவகுத்தது. இந்த காணொளி மூலம், உண்மைகளை தெளிவுபடுத்தவும், எனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கவும் விரும்புகிறேன். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், மேலும் தவறான புரிதல்களைத் தவிர்ப்பதற்கும் இந்த செய்தி பகிரப்படுகிறது என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் அண்மையில் நடந்த தமிழ் சங்க விழாவிற்காகப் பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் சென்றிருந்தார்கள். அங்கு அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த கார்த்திகேயன் என்பவரின் தங்கை, தனது அனுபவத்தை வருத்தத்துடன் பகிர்ந்தார். இது குறித்து கார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், தனது தங்கை மிகுந்த ஆர்வத்துடன் உணவு சமைத்துச் சென்றார். அப்போது ராஜா அங்கிருந்தவர்களிடம் ஊர் பெயர்களைக் கேட்டு அவர்களின் சாதியை ஊகிக்க முயன்றுள்ளார்.

கார்த்திகேயன் என்பவர் பதிவு
குறிப்பாக, காரைக்குடி என்று பதில் அளித்த தனது தங்கையிடம், "நீங்கள் செட்டியாரா?" என்று கேட்டதுடன் நில்லாமல், அவர் அமைதியாக இருந்தபோதும் "நீங்கள் வேறு என்ன ஆட்கள்?" என்று மீண்டும் மீண்டும் துருவித் துருவி விசாரித்தாராம். சாதிய அடையாளங்களைக் கடந்து வாழ்வதற்காக வெளிநாடு சென்ற இடத்தில், தமிழகத்திலிருந்து வந்த ஒரு புகழ்பெற்ற பேச்சாளர் இத்தகைய செயலில் ஈடுபட்டது தனது தங்கையை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியதாகவும், அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் கார்த்திகேயன் அந்தப் பதிவில் கூறியிருந்தார்.
செட்டியாரா
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, பட்டிமன்றம் பேச்சாளர் ராஜா இதற்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உணவு மிகவும் ருசியாக இருந்த காரணத்தால், அது செட்டிநாட்டு முறைப்படி சமைக்கப்பட்டதா என்பதை அறியவே "செட்டிநாடா?" என்று கேட்டேன். மற்றபடி "செட்டியாரா?" என்று சாதி ரீதியாகத் தான் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
காரைக்குடி என்றார்
அந்த வீடியோவில் பட்டிமன்றம் ராஜா கூறுகையில், ஒரு செய்தியை விளக்கமாக தர விரும்புகிறேன். அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வரும் போது, பல தமிழ் குடும்பங்கள் வந்தார்கள். அப்படி நிகழ்ச்சிக்கு வருபவர்கள், எங்களுக்கு சமைத்து சாப்பாடு போடுவார்கள்.. சில நேரங்களில் சாப்பாடு, நம்ம ஊர் உணவைவிட சுவையாக இருக்கும்.. அப்ப அவங்க ஊர் பெயரையும் சொல்லுவார்கள்...சிலர் என்னிடம் நான் உங்கள் ஊர் சார் மதுரை. நான் திருச்சி, நான் வாடிப்பட்டி, நான் தேனி.. இப்படி எல்லாம் சொல்வார்கள்.. அப்ப ஒருந்தவங்க காரைக்குடி என்று சொன்னார்கள்..
சின்ன புத்தி இல்லை
அவரிடம் நான் செட்டிநாடா என்று கேட்டதாக நியாபகம் உள்ளது. செட்டியாரா என்று நான் கேட்கவில்லை.. அவ்வளவு சுவையாக செட்டிநாட்டு உணவு இருக்கிறதே என்று தான் கேட்டதாக நியாபகம் இருக்கிறது. அவர்கள் யார்.. என்ன ஜாதி என்று யோசிக்கும் அளவிற்கு எனக்கு சின்ன புத்தி இல்லை.. நான் இத்தனை வருடங்களாக தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் சந்திக்கிறேன்.. எங்காவது நான் சாதிய சமய உணர்வுகளுடன் இருந்தேன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்... என்னுடன் பயணித்த எல்லாருக்கும் தெரியும்.. என்னை சந்தித்தவர்களுக்கு தெரியும்..
என்ன நடந்தது
தமிழர் சாதி என்ற ஒன்றைத்தான் நான் பெருமையாக கருதுகிறேன்... இதில் வேறு ஜாதி எதுவும் இல்லை.. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அந்த கேட்ஸ் என்ற அமைப்பு எங்களை சந்திக்கிற நிகழ்வு meet and great என்று வைத்தார்கள்.. அந்த நிகழ்வில் நாங்கள் பேசியது இருக்கிறது.. யாரும் ஜாதிய உணர்வுகளுடன் சமய உணர்வுகளுடன் இங்கே இருக்காதீர்கள்.. உங்களுக்குள் குழுக்களாக பிரிந்து இருக்கிறீர்கள்... தமிழ் சங்கங்களே.. இரண்டு மூன்றாக இருக்கிறது.. எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் தமிழுக்கு நல்லது தானே.. ஒருவரின் நிகழ்ச்சிக்கு இன்னொருவர் போகாமல் இருக்காதீர்கள்.. எல்லாரும் சேர்ந்து இருங்கள்.. இப்படி எல்லாம் நான் பேசியிருக்கிறேன்..
பிப்ரவரி 3ம் தேதி நடந்தது
அந்த ஊர் நிகழ்ச்சி நடந்தது பிப்ரவரி 3ம் தேதி.. செவ்வாய்கிழமை. அந்த நிகழ்வு நடந்த ரொம்ப நாள் கழித்து.. அதாவது பிப்ரவரி 9ம் தேதி தகவல்கள் பரப்பப்படுகிறது. ஒருவேளை.. அப்படி பேசியிருந்தால், அந்த சகோதரி அப்போதே என்னிடம் கேட்டிருக்கலாம். அன்று மாலை நடந்த பட்டிமன்றத்தில் பேசியிருக்கலாம்.. பனி அங்கு அதிகமாக இருந்தது. அங்கு எங்களை தேடி வந்து.. அன்பாக உணவு தரும் போது, அவர்களின் முகங்கள் எங்களுக்கு உறவினரை விட நெருக்கமாக தெரியும்...
மனவலியுடன் பேசுகிறேன்
உண்டி கொடுத்தோ உயிர் கொடுத்தோர் என்று தமிழில் உண்டு. அந்த ஊரில் உள்ள பிரெட்டுக்கு மத்தியில் ஒரு மணி நேரம், அரை மணி நேரம் பயணம் செய்து இட்லி, தோசை, பொங்கல் உள்பட நல்ல உணவு எங்களுக்கு கொடுக்கிறார்கள். பிள்ளைகளின் அன்புக்கு நிகர் அதுமட்டும் தான்.. அவங்களை போய் நான் ஜாதியை பற்றி விசாரிப்பேனா.. அது தவறான பதிவு.. உண்மையில் நான் மனவலியுடன் பேசுகிறேன். எந்த காலத்திலும் அப்படி இருந்ததும் இல்லை.. இருக்கப்போவதும் இல்லை.
ஜாதி எல்லாம் கேட்க முடியுமா
தமிழ் சொந்தங்களே.. தயவு செய்து இந்த கருத்துக்களை புறந்தள்ளுங்கள்.. கடவுள் அறிய அந்த மாதிரி நான் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.. இந்த பயணங்களே ரொம்ப கஷ்டமானதுங்க.. அங்க தான் சாப்பாடு கொடுத்து எங்களை கொஞ்சமாவது காப்பாத்துறாங்க.. அவங்களை போய் நான் ஜாதி எல்லாம் கேட்க முடியுமா.. கேட்பேனா.. எதற்கு கேட்கணும்.. என் பிள்ளைகள் மாதிரி வந்து நிற்கிறார்கள்.. அவங்க கிட்ட போய் நான் எப்படி கேட்க முடியும்.. தவறான புரிதல் இருந்தால் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுங்கள்.. முகநூலில் இதனை பரப்புபவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். என் அன்பான வேண்டுகோள்.. நன்றி! " இவ்வாறு பட்டிமன்றம் ராஜா வீடியோவில் கூறியுள்ளார்.
-
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்!












Click it and Unblock the Notifications