Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவளக்கார தெரு டூ பவள விழா! திமுகவை தொடங்க வீடு கொடுத்த திருவொற்றியூர் சண்முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாக எங்கே தொடங்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத வரலாறு. ஒரு காலத்தில் வடசென்னையில் பிறந்த இந்தக் கட்சி இன்று மத்திய அரசை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து நிற்பது எப்படி?

திமுக தனது பவள விழாவை இன்று மிக விமர்சையாக கொண்டாட இருக்கிறது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த விழா தடபுடலாக நடைபெற இருக்கிறது. கூடவே முப்பெரும் விழாவும் இங்கே நடைபெற இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவுக்கு விழாக்காலமாக அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை திமுக, மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைப் பல வகைகளில் கொண்டாடி மகிழ்ந்தது. அதன் கடைசி நிகழ்ச்சியாகக் கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.

dmk mk stalin chennai

அதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட ஆரவாரத்திற்கு திமுக இப்போது தயாராகிவிட்டது. அக்கட்சியின் பவள விழா களைகட்டி இருக்கிறது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை திமுகவை 1949 ஆம் ஆண்டு பெரியாரின் 71 ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி வடசென்னையில் உள்ள ராபின்'சன்' பூங்காவில் நிறுவினார். அப்போது வரும் காலத்தில் திமுகவின் சின்னமாக 'சன்'தான் இருக்கப்போகிறது அண்ணாதுரைக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்போது திமுகவின் ஆதரவாளர்கள் அதிகம் வடசென்னை தொழிலாளர் பகுதியில்தான் அதிகம் இருந்தனர். ஆகவே அங்கேதான் கட்சி தொடங்கப்பட்டது.

அண்ணாதுரை செப்டம்பர் 17 ஆம் தேதி 1949 அன்று கட்சித் தொடங்கப்படும் என்று அறிவித்துவிட்டார். ஆனால் அன்று சென்னையில் அடைமழை. காலையில் பிடித்த மழை மாலை வரை விட்டபாடில்லை. கட்சி தொடங்கப்படுமா? விழா நடைபெறுமா? என்ற கலக்கத்தில் கழகக் கண்மணிகள் தவித்தனர். இறுதியாக மாலையில் மழை ஓய்ந்த பிறகு கட்சியின் பெயர் பலகையைத் திறக்க அறிவித்தார் அண்ணா.

திராவிடர் கழகத்தில் தளபதியாக இருந்து வந்த அண்ணாதுரை, அந்த இயக்கத்தின் நிறுவனர் பெரியார் என அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி முதுமையில் மணியம்மையைத் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார். கட்சியின் அடுத்தநிலையிலிருந்த அண்ணாதுரை உள்ளிட்ட பலருக்கும் அது அதிர்ச்சியை அளித்தது. அந்தக் கல்யாணத்தை எதிர்த்து 'திராவிட நாடு' உள்ளிட்ட இதழ்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். தனக்குப் பிற்பாடு தனக்கு ஒரு நம்பிக்கையான வாரிசு தேவை என்பதால் இந்தத் திருமணத்தைச் செய்து கொள்கிறேன் என்றார் பெரியார். கிட்டத்தட்ட 70 வரை தொட்ட ஒரு முதியவருக்குத் திருமணம் தேவையா? என அண்ணாதுரை ஆதரவாளர்கள் பலர் திராவிடர் கழகத்திற்குள் இருந்தபடியே கலகம் செய்தனர். திராவிட நாட்டில் 'கண்ணீர்த் துளிகள்' என்று தலைப்பு போட்டு பெரியாரின் கல்யாணத்தைக் கண்டித்து எழுதினர். அதைக் கொண்டே பெரியார் அண்ணாதுரை ஆதரவாளர்களைக் கண்ணீர்த் துளிகள் என்று அழைக்கத் தொடங்கினார்.

இறுதியாக இங்கே இருக்க முடியாது என்ற நிலை எழவே, தனிக் கட்சி தொடங்குவது என அண்ணாதுரை முடிவு செய்தார். அப்போது அண்ணாதுரை ஆதரவாளர்கள் பெரியாருடன் சண்டைக்கு நின்றனர். அவர்களை அழைத்து, 'பெரியாருடன் மோதக் கூடாது. அப்படி மோதுவது புலி வேட்டைக்குப் போனவன் எலி வேட்டைக்குப் போவதுபோல்' என்றார் அண்ணாதுரை. திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அறிவித்தார். கூடவே மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று கர்ஜித்தார்.

'திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஒட்டு மாஞ்செடி. மண்வளம் ஏராளம். நீர் பாய்ச்ச, பதப்படுத்த, பாத்திகட்ட முன்னிற்போர் பலர். ஒட்டு மாஞ்செடி பூத்துக் காய்ந்து கனி கலுங்கும் நாள் வந்தே தீரும். நம்மிடம் பணம் இலை. இந்தப் பயல்களிடம் பணம் ஏது? கொஞ்ச நாட்களுக்குக் கூச்சல் போட்டு அடங்கிவிடுவார்கள். பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும்? என்று பேசப்படுகிறதாம். பணம் என்பது சாதனமே ஒழிய, அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல' என்றார் அண்ணாதுரை என்று தனது சுயசரிதையில் தொடக்கக்கால திமுக தலைவர்களில் ஒருவரான இராம. அரங்கண்ணல் எழுதி இருக்கிறார்.

திமுகவை தொடங்க சென்னையில் ஒரு இடம் தேவை என அண்ணாதுரை நினைத்தபோது அவருக்கு தனது வீட்டை அலுவலகமாகக் கொடுத்தவர் திருவொற்றியூர் டி.சண்முகம். சென்னை மண்ணடியில் உள்ள பவளக்காரா தெருவிலிருந்த அவர் வீட்டு மாடியைக் கட்சித் தொடங்குவதற்காக அவர் கொடுத்தார். இங்கேதான் திமுக தொடங்கப்பட்டது. இந்த இடத்திற்குச் சண்முகம் வாடகை வாங்க மறுத்தார். அவருக்கு சில வீடுகள் இருந்ததால், பணப் பிரச்சினை அவருக்கு இல்லை. ஆனாலும் அண்ணாதுரைக்கு அது சங்கடமாக இருந்தது. நாளை இது ஒரு சர்ச்சைக்கு வழி வகுக்கலாம் என நினைத்தார்.

dmk mk stalin chennai

அதன்பின்னர் 208, தங்கசாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கட்சியின் தலைமை நிலையத்தை தொடங்கினார் அண்ணாதுரை. இங்கே தொடங்கப்பட்ட இயக்கும்தான் இன்று இந்தியாவிலேயே பழமையான ஒரு மாநிலக் கட்சியாக வலம் வருகிறது . அண்ணாதுரைப் போட விதை மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து இன்று 75 ஆண்டுகள் பழமையான கட்சியாக அயராமல் நடை போட்டு வருகிறது.

அதன்பின்னர் அண்ணாதுரை உயிருடன் உள்ளபோதே சென்னையின் மையப் பகுதியில் திமுகவுக்கு அலுவலகம் வேண்டும் என்ற யோசனை பிறந்தது. அதனடிப்படையில் 1964 ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் உள்ள 'அன்பகம்' அலுவலகத்திற்கு திமுக தலைமையகம் மாற்றப்பட்டது. அங்கே இடவசதி போதாதக் காரணத்தால் மிகப் பிரம்மாண்டமாக 'அண்ணா அறிவாலயம்' அலுவலகத்தை முன்னாள் முதல்வர் மு கருணாநிதி கட்டினார். அது 16.09.1987 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் திமுக செயல்படத் தொடங்கி 37 ஆண்டுகள் விரைந்தோடி விட்டன.

'அறிவாலயம்' திமுகவின் அதிகாரப்பூர்வ அலுவலகமாகச் செயல்படத் தொடங்கிய பிறகு 'அன்பகம்' கட்சியின் இளைஞரணி கைக்கு மாறியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+