திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு! சனாதனம் சிதைய கூடாது! 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்
சென்னை: திருப்பதியில் உள்ள திருமலா கோயிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதற்கு பிராயச்சித்தமாக ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளார். அவரின் உண்ணாவிரதம் இன்று தொடங்குகிறது.
குண்டூர் மாவட்டம் நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் இன்று காலை முதல் 11 நாள் உண்ணாவிரதத்தை ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தொடங்கி உள்ளார். 11 நாட்கள் கோவிலில் "பிரயஷ்சித்த தீட்சை" செய்ய உள்ளார். .

மோசமாகிவிட்டது: இது தொடர்பாக பவன் கல்யாண் அளித்த பேட்டியில், புனிதமாக கருதப்படும் திருமலை லட்டு பிரசாதம் கடந்த ஆட்சியாளர்களின் கேவலமான போக்கின் விளைவாக தூய்மையற்றதாக மாறியுள்ளது. இந்த பாவத்தை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடியாமல் போனது இந்து இனத்தின் மீதான கறை. லட்டு பிரசாதத்தில் மிருக கொழுப்பு இருந்ததை அறிந்த நொடியே அதிர்ச்சி அடைந்தேன். குற்ற உணர்வு ஏற்பட்டது. மக்கள் நலனுக்காகப் போராடி வருவதால், இதுபோன்ற பிரச்னைகள் ஆரம்பத்தில் என் கவனத்துக்கு வராதது வேதனை அளிக்கிறது.
கலியுகக் கடவுளான பாலாஜிக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரமான அநீதிக்கு சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதன் ஒரு பகுதியாக நான் ஒரு தவம் செய்ய முடிவு செய்தேன். 22 செப்டம்பர் 2024 அன்று, ஞாயிற்றுக்கிழமை காலை, குண்டூர் மாவட்டம், நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் நான் தீட்சை எடுப்பேன். 11 நாட்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்த பிறகு திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்கிறேன், என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
மாட்டுக் கொழுப்பு : திருப்பதி லட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த புகார் தற்போது உண்மையாகி உள்ளது. லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.
ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
புகார் என்ன?: 2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் நமது மிகவும் புனிதமான கோவில்.
ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ரிசல்ட் சொல்வது என்ன?: இதற்காக அப்போது தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 5 சாம்பிள் எடுத்துள்ளனர். இதன் கொழுப்பு மதிப்பு எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது 5 சாம்பிள் மதிப்புகள் முறையே, 86.62 , 106.89, 22.43, 117.42, 19.72 ஆகும்.
இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவர்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு குறைவாக உள்ளது. இப்படி குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால்.. அதில் வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.
இதில் சாம்பிள் ஒன்றில் சோயா பீன் அவரை, சூரியகாந்தி, ஆலிவ், ராப் விதை, லிப் விதை, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், கொழுப்பு இருக்கலாம்.
சாம்பிள் இரண்டில், தேங்காய் மற்றும் பனை கருப்பட்டி கொழுப்பு
சாம்பிள் மூன்றில் பாம் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி
சாம்பிள் நான்கில் பன்றிக்கொழுப்பு இருந்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. இவற்றில் எதுவாகவும் இருக்கலாம். எதிலும் உறுதியாக முடிவு சொல்லப்படவில்லை. மீன் எண்ணெய் அல்லது மாட்டுக் கொழுப்புதான் என்று சொல்ல முடியாது. முக்கியமாக standard s value- வரம்பு வைத்து ஒரு முடிவிற்கு வர முடியாது.
பசு மாட்டை தவிர வேறு மாட்டின் நெய்யை பயன்படுத்தினால், மாட்டிற்கு அதீத தீவனம் கொடுத்தால் அல்லது மாட்டிற்கு மிக குறைவாக தீவனம் கொடுத்தால் கூட அதன் நெய்யில் இருக்கும் கொழுப்பு இந்த மாதிரி தவறான எஸ் மதிப்புகளை காட்ட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications