Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழ.கருப்பையா பாஜகவை இப்படி சொல்லிட்டாரே? திமுக ஓட்டை பிரிக்க எடப்பாடி பழனிசாமி அவருடன் தான் கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் விஷயத்தில் மோகம் காரணமாக ரசிகர்கள் கூடுகிறார்கள்.. இதற்கு ஊருக்குள் கூட்டம் நடத்த கூடாது.. விஜய் இனிமேல் வெளியிலிருந்துதான் பேச வேண்டும். ஆனால் இந்த தடைகள், கட்டுப்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு போட தேவையில்லை.. இத்தனை காலமும் இந்த கட்சிகள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றன.. எந்த நெரிசலும் இதுவரை எற்பட்டதில்லை" என்கிறார் மூத்த தலைவர் பழ.கருப்பையா. ஒரு சேனலுக்கு தந்துள்ள பேட்டியில் விஜய் பற்றி கூறியுள்ளார்.

Zhagaram Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா, சிபிஐ என்பது மாநில அரசுக்கு கட்டுப்படுகின்ற அமைப்பு கிடையாது.. லோக்கல் போலீஸ் எப்போதுமே மாநில அரசுக்கு சார்பாகவே இருக்கும்.. எனவே மாநில அரசுக்கு எதிராக இருப்பவர்கள் சிபிஐ கேட்பார்கள்.

Pazha Karuppaiah BJP Edappadi Palanisamy

அந்தவகையில் தவெகவும் சிபிஐ விசாரணை கேட்கிறது.. பாஜக அரசு தனக்கு ஆதரவாக இருப்பதால், சிபிஐ கிடைத்துவிடும், அதன்மூலம் எதிர்போக்கு இல்லாமல் இருக்கும் என்று தவெக நம்புவதாக தெரிகிறது.

ஒரு நபர் கமிஷன்

நீதிமன்றமே ஒரு பெரிய போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு நபர் கமிஷனை நியமித்துள்ளது.. அந்த விசாரணை நடந்து வருகிறது. அதேபோல மாநில அரசும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையத்தை அமைத்துள்ளது. அந்த ஆணையமும் விசாரணையை நடத்தி வருகிறது. உண்மையை கொண்டுவர இவர்களே போதுமானவர்கள்தான். 41 பேர் இறந்துவிட்டதால்தான் நாடே கொதித்துவிட்டது. இது மிகப்பெரிய சோகம்.

ஆனால், விஜய் இதை அறிந்து செய்யவில்லை.. விஜய்க்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.. 8 மணிநேரம் தாமதமாக வருகிறார்.. அதை செய்திருக்க தேவையில்லை.. சொன்ன நேரத்துக்கு வந்திருந்தால், 3 மணிக்கே அங்கிருந்தே கிளம்பி சென்றிருக்கலாம். சினிமாவில் தெரியும் பிம்பம் பொதுவாழ்விலும் தெரிய வேண்டும் என்பதை வலிமை என்று கருதுகிறார். திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடைக்கு வருவதற்கு 5 மணி நேரமாவதை பெருமையாக கருதுகிறார்.. தன்னுடைய கூட்டத்தை ஊரே பேச வேண்டும் என்று நினைக்கிறார்.

விஜய்தான் மாற்ற வேண்டும்..

கரூரில் மட்டும் ஏன் நடந்தது என்று கேட்கிறார்.. திருச்சியிலேயே இது நடந்திருக்கும்.. எங்கும் நடந்திருக்கும்.. சினிமா பிரபலத்தை காண வரும் கூட்டத்தை விஜய்தான் மாற்ற வேண்டும்.. விசிலடிப்பதும், பைக்கில் பின்னாடியே வருவதும் ஏன் என்று கேட்டு அவர்களை மாற்ற வேண்டும்..

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவு தந்து வருகிறார்.. அரசு மீது அதிருப்தி கொண்டவர்கள் இப்படித்தான் ஒன்றிணைவார்கள்.. ஆனால் அண்ணாமலை யாரை ஆதரிக்க வேண்டும் என்று முதலில் முடிவுசெய்துவிடுகிறார்... ஆனால் அது நல்ல போக்கு இல்லை.

விஜய் விஷயத்தில் மோகம் காரணமாக ரசிகர்கள் கூடுகிறார்கள்.. இதற்கு ஊருக்குள் கூட்டம் நடத்த கூடாது.. விஜய் இனிமேல் வெளியிலிருந்துதான் பேச வேண்டும். ஆனால் இந்த தடைகள், கட்டுப்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு தடை போட தேவையில்லை.. இத்தனை காலமும் இந்த கட்சிகள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றன.. எந்த நெரிசலும் இதுவரை எற்பட்டதில்லை.

பாஜக பாசிஸ்ட்

இந்த விவகாரத்தில் துன்பப்படும் விஜயை தன்னுடைய அணிக்கு கொண்டுவந்துவிடலாம் என்று பாஜக நம்புகிறது.. எனினும் பாசிஸ்ட் கட்சி என்று சொல்லிவிட்டு, அந்த கட்சியுடன் இணைவது என்பது எளிதல்ல..

பாஜக, அதிமுக

அதாவது பாஜகவும், அதிமுகவும் விஜய்யுடன் இருக்கவே விரும்பினார்கள்.. ஒரு சமய சார்பற்ற கூட்டணியை உருவாக்கவே எடப்பாடியும் விரும்பினார்.. குதிரை கிடைக்கவில்லை என்றால் கழுதை கிடைப்பதை போல, பாஜகவிடம் அவர் இணைந்து கொண்டார்..

பாஜகவின் மிகப்பெரிய குறை அது மதச்சார்புள்ள கட்சி.. ஒரு மதத்துக்கு சார்பும், இன்னொரு மதத்தக்கு எதிர்ப்பும் உள்ள கட்சி.. எனவே மாற்று மதத்தினர் இவர்களை பகையாக கருதுகிறார்கள்.. அப்படி 12 சதவீத வாக்குகள் உள்ளன.. இவர்கள் எல்லாம் திமுகவுக்கு மாறாமல் வாக்களிப்பதால்தான், திமுக 40-க்கு40 வெற்றி பெறுகிறது.

எடப்பாடியே வருக வருக

இப்போது விஜய் கட்சிக்காரர்களே எடப்பாடியை வருக வருக என்று வரவேற்கும் போஸ்டர்களை பார்க்க முடிகிறது.. அதாவது மேல் மட்டத்திலிருந்து வரும் கருத்துக்கு பதிலாக, கீழ் மட்டத்திலிருந்து கருத்து உருவாகிறது.. நமக்கு ஒரு அணி வேண்டும், நாம் ஒரு கூட்டில் இருந்தால்தான் வலிமை, நமக்கு ஆதரவாக எடப்பாடி பேசுவதால், அவரை விஜய் தொண்டர்களே விரும்புகிறார்கள்,.

எனினும், அதிமுக பாஜகவுடன் உள்ளதால், பாசிஸ்ட் என்று சொல்லிவிட்டு, எப்படி கூட்டணி சேருவது என்பதுதான் விஜயின் நெருடலாக உள்ளது என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+