பூங்காக்களை தேடி அலைய வேண்டாம்.. சூப்பராக மாறும் 16 இடங்கள்.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்
சென்னை: பொதுமக்களின் வசதிக்காக சென்னை மாநகராட்சி பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக பூங்காக்களில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அமைப்புடன், சென்னையில் சில முக்கிய சாலைகளை கண்டறிந்து அங்கும் நடைபாதை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறதாம்.
இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் சென்னை சிட்டியும் ஒன்று. எங்கு பார்த்தாலும் கான்கிரீட் கட்டிடங்களாக சென்னையில் தென்படும். திரும்பும் பக்கமெல்லாம் டிராபிக், எந்த பக்கம் பார்த்தாலும் பரபரப்பாக செல்லும் வாகனங்கள் என சென்னை நகரமே படு பிசியாக காலை முதல் நள்ளிரவு வரை காணப்படும்.

மாநகராட்சி ஏற்பாடு: எப்பொதும் பரபரப்பான வாழ்க்கை முறையில் இருக்கும் சென்னை வாசிகளும் உடல் நலத்தை பேணவும் சற்று இளைப்பாறவும் காலை மாலை வேளைகளில் மாநகராட்சி பூங்காக்களுக்கு செல்வது.. நடைபயணம் செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள். சென்னையை பொறுத்தவரை நெரிசல் மிக்க பகுதிகளில் மாநகராட்சி பூங்காக்கள் போதிய அளவு இல்லை.
இதனால் நடைபயணம் செய்ய நினைப்பவர்கள் தங்கள் வீட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பூங்காக்களுக்கு பைக், சைக்கிளில் சென்று நடைபயிற்சி செய்வதையும் பார்க்க முடிகிறது. பூங்கா மட்டும் இன்றி சென்னை மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளிலும் மக்கள் நடைபயிற்சி செல்ல வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக பெசண்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நடைபாதை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முக்கிய சாலைகளில்: இந்த நடைபாதைகளில் செடி, கொடிகளுடன் பார்ப்பதற்கு இயற்கையான பசுமை சூழலில் நடைபயணம் செய்வது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் அமர்வதற்கும் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இதேபோன்று நடைபாதை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில் சில முக்கிய சாலைகளை கண்டறிந்து அங்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
16 இடங்களில் நடைபாதை: சென்னை டவுட்டன் ரித்தர்டன் சாலை, மகாகவி பாரதியார் நகரில் வெஸ்ட் ஆபிஸ், மீனாம்பாள் சாலை, சென்ட்ரல் அவின்யு, வியாசர்பாடியில் சத்தியமூர்த்தி மெயின் ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், நங்க நல்லூரில் 4, 5, 6, 48-வது தெருக்களில் சுகாதார நடைபாதை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பெசண்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை போன்று 16 இடங்களில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
ரூ. 26 கோடி மதிப்பீடு: சென்னை சிட்டி பேருந்துகள் செல்லும் ரூட்களை தேர்வு செய்து பொதுமக்கள் பயன்பெறுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது. ரூ 26 கோடியில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின் படி, தேர்வு செய்யப்பட்டுள்ள நடைபாதைகளில் அழகு செடிகள், செல்பி பாயிண்ட்கள் போன்றவைகள் இடம் பெறும். இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் இந்த டெண்டர் இறுதி செய்யப்படும்" என்றனர்.












Click it and Unblock the Notifications