Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்கள் எப்போது? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் சேவை துறைகளில் ஒன்றான போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்டாலும் தமிழ்நாடு அரசு அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலும் பணப் பலன்கள் கிடைக்கவில்லை என ஓய்வூதியர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. விரைவில் இது குறித்த இனிப்பான செய்தி வெளியாகும் என்கின்றனர் தமிழக அரசு வட்டாரத்தினர்.

உணவு, உடை, இருப்பிடம் போல மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு சேவை என்றால் அது போக்குவரத்து துறை தான். தனியார் வசம் இருந்தாலும் தமிழ்நாடு அரசு சேவை வழங்கும் துறைகளில் போக்குவரத்து துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

tamilnadu govt Transport Staff chennai

தமிழகத்தை பொறுத்தவரை ஏராளமான போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், அது மட்டுமல்லாமல் விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லை, கோவை ஆகிய கோட்டங்களின் தினந்தோறும் 17,000 அரசு பேருந்துகள் சுமார் 18000 கிராமங்களுக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம், மூத்த குடிமக்களுக்கு சலுகை விலையில் பயணம், பத்திரிக்கையாளர்கள் காவலர்களுக்கும் சலுகை விலை மற்றும் இலவச பேருந்து பயணம் என சேவையாற்றி வருகிறது. தமிழக முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய போக்குவரத்து தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இது தவிர ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களும் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். காரணம் தொடர்பாக விசாரித்த போது 2023 ஜூன் மாதம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும், வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் இதுவரை பண பலன்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

விழுப்புரம், கும்பகோணம், விருதுநகர் மண்டலம் உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள 3000 முன்னாள் போக்குவரத்து ஊழியர்களுக்கு பண பலன்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அரசு போக்குவரத்து துறை சேவை துறை என்பதால் நஷ்டம் ஏற்படும் என தெரிந்தும் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த இழப்பை அரசுதான் ஈடு கட்ட வேண்டும். போக்குவரத்து கழகங்களில் வரவு செலவு இடையே இருக்கும் வித்தியாசத்தை அரசுதான் ஈடு கட்ட வேண்டும். ஆனால் தொழிலாளர்களின் 15 ஆயிரம் கோடி வைப்புத் தொகையை அரசு செலவு செய்திருப்பதாக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டம் சாட்டிய நிலையில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்குவதில்லை எனவும் கூறினர்.

கடந்த 22 மாதங்களில் மட்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 3500 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளின் திருமணம், உயர் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியவில்லை என தொழிலாளர்கள் பலர் கூறுகின்றனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்கள் வழங்குவது, அங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்கின்றனர் தமிழக அரசு வட்டாரத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+