Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பென்ஷன்.. அரசு ஊழியர்களுக்கு விடிவு காலம்.. ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருக்கிறது.. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் ஓய்வூதிய பலன் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவை வழங்கப்படாமலேயே இருந்தது..

government employees pension transport corporation

வைப்பு நிதி: இந்நிலையில், தீபாவளி நெருங்கியுள்ளதால், பண்டிகையையொட்டி, ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்தது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களோ திடீரென ஆர்ப்பாட்டத்தை அறிவித்துவிட்டனர்...

வைப்புநிதி, சம்பளம் விடுவிப்பு, ஓய்வூதிய தொகை, 2015-ம் நவம்பர் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்தனர்.

ஓய்வூதிய பலன்: இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. பிறகு உடனடியாக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.. இதையடுதது, ஓய்வூதிய பலன் வழங்க அரசு முன்வந்துள்ள நிலையில், அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

"தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.372.06 கோடி வழங்கிட கருணை உள்ளத்தோடு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

இறந்த பணியாளர்கள்: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கிட 29/03/2023 அன்று உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கப்பட்டது.

மகிழ்ச்சி: இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட, தமிழ்நாடு முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செயலி: இதனிடையே, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு எளிதாக விடுப்பு எடுப்பது குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விடுப்பு கோரி விண்ணப்பம் செய்வதை எளிதாக்களும் வகையில் மாநகர போக்குவரத்து கழக பணியாளர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களால் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த செயலியை மேலும் மேம்படுத்தும் வகையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு எளிதாக விடுப்பு வழங்குவதை செயல்படுத்த ஆட்டோ அப்ரூவல் என்ற முறை மூலம் விடுப்பு வழங்கும் பகுதி வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இச்செயலியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான வழிமுறைகளும் வெளியாகியிருப்பதும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+