பள்ளிக்கரணை டாஸ்மாக் பாரில் சட்டவிரோத மது விற்பனை.. வீடியோ வெளியிட்டு ஏரியா மக்கள் குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை பின்புறம் உள்ள மதுபான பாரில் பகல் 12 மணிக்கு முன்பு விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அரசு மதுக்கடைகளை திறக்க நேரம் விதித்துள்ள நிலையில் பகல் 12 மணிக்குள்ளாகவே விற்பனை களைகட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதுமே டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் உள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மதுபானங்கள் விற்க டாஸ்மாக்குடன் இணைந்த பார்களுக்கு அனுமதி இல்லை.. ஆனால் அங்குள்ள சில பார்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 180 மில்லி கொண்ட மதுபானம் இரவு நேரங்களில் 70 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவதாக குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

அதேபோல் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதும் தொடர்பாக குற்றம்சாட்டுகிறார்கள். பாட்டிலின் அடக்க விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது தொடர்வதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். அதாவது 180 மில்லி மதுபானம் கொண்ட பாட்டிலுக்கு 10 ரூபாயும், 360 மில்லி கொண்ட பாட்டிலுக்கு 20 ரூபாயும், 720 மில்லி கொண்ட பாட்டிலுக்கு 40 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் குடிமகன்கள். என்னதான் அரசு விலை பட்டியல் மற்றும் ஸ்கேன் கருவி, பில் போடுவது என நடைமுறை மாற்றங்களை கொண்டு வந்தாலும், டிஜிட்டல் பரிவர்த்தனை வந்தாலும், கூடுதல் விலைக்கு விற்பது நிற்கவே இல்லை என்கிறார்கள் குடிமகன்கள்.
இந்த முறைகேடுகளைத் தடுக்க வைத்த கோரிக்கைகள் நடைமுறையில் நிறைவேறுது சாத்தியமே இல்லையா என்றும் குடிமகன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது ஒருபுறம் எனில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள் பொதுமக்கள்.
சென்னையில் , பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை பின்புறம் உள்ள மதுபான பாரில் பகல் 12 மணிக்கு முன்பு விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் தாம்பரம் மாநகர காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட , பள்ளிக்கரணை காவல் காவல் நிலைய போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications