வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாமல்.. லட்சக்கணக்கானோர் தவிப்பு.. ITRல் வந்த பெரிய சிக்கல்!
சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான PORTAL இன்னும் திறக்கப்படாததால் மக்கள் தவித்து வருகிறார்கள். கடந்தாண்டு ஏப்.16ம் தேதியே போர்டல் திறக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு மே.21ம் தேதி ஆகியும் திறக்காததால் லட்சக்கணக்கானோர் குழப்பம் அடைந்து உள்ளனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. e filing திறக்கப்படவில்லை என்று முதல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பலரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

வெளியிடப்பட்ட பார்ம்கள்:
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை வெளியிட்டு உள்ளது. பார்ம் 1 மற்றும் 4ஐ வெளியிட்டு உள்ளது. ஆனால் எல்லோருக்கும் இந்த பார்ம் இன்னும் வெளியாகவில்லை என்பதுதான் சிக்கலே.
இன்னும் பலருக்கு ITR விண்டோ திறக்கவில்லை. அதாவது பார்ம் 1 மற்றும் 4ஐ வெளியிட்டு உள்ளனர். ஆனால் அதை தாக்கல் செய்யலாம் என்று போனவர்களுக்கு இன்னமும் வருமான வரி பக்கம் திறக்கப்படவில்லை. e filing இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இன்று மே 9.. ஏற்கனவே 1 மாதம் சென்றுவிட்டது. இனி மக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்தாலும் பல லட்சம் பேர் தாக்கல் செய்யாமல் போகலாம். இந்த தாமதம் வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பளதாரர்கள் பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்யும் பட்சத்தில் பின் வரும் விஷயங்களை கவனிக்க வேண்டும்:
பழைய வருமான வரி முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது
உங்களின் சம்பளத்தின் முதல்
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது மேற்கண்ட வரி விதிக்கப்படும்.
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது .
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications