அதிகாலையே வந்த குட்நியூஸ்! மகளிர் உரிமைத்தொகை மீண்டும் மேல்முறையீடு செய்யலாம்! இனி மாதம்தோறும் சோதனை
சென்னை: தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு தொடர்ந்து மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக புதிய அறிவிப்பு இன்று அதிகாலை வெளியிடப்பட்டு உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது தற்போது உள்ள பயனாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்களின் பண வசதி உயர்ந்து இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும். அதேபோல் அவர்களின் வருமானம் கூடி இருக்கிறதா.. என்றும் சோதனை செய்யப்படும். அவர்கள் உயிரோடு உள்ளனரா என்பதும் மாதம் மாதம் சோதனை செய்யப்படும் . அவர்கள் புதிதாக வாகனம் வாங்கி உள்ளனரா என்பதும் சோதிக்கப்படும்.
இது எல்லாம் சோதிக்கப்பட்டு அதன்பின்பே மாதம் மாதம் பணம் போடப்படும். தேவையின்றி பண வசதி படைத்தவர்களுக்கு பணம் போடுவதை தடுப்பதற்காக இந்த சோதனை முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
பயனாளிகள் மேல்முறையீடு: அதோடு பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது இதுவரை பணம் கிடைக்காமல் விடுபட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய முடியும். அவர்களுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்றே முதலில் கருதப்பட்டது.
ஆனால் கால அவகாசம் முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து மேல்முறையீடு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறிந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது ஆகும் இந்த திட்டம்.

கடந்த மாதம் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மாதமே 14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. அதேபோல் இந்த மாதமும் வங்கிகள் விடுமுறை என்பதால் 15ம் தேதிக்கு பதிலாக 14ம் தேதியே பணம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
மேல்முறையீடு திட்டம்: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கூறுகையில், தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும். தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளைச் சென்றுசேர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. அதுபோலவே. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.53 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு. அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,55.21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும், என்று அறிவித்துள்ளனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications