தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவில் தவெக எம்எல்ஏ பல்லவியை நான் அவமதிக்கவில்லை. புரோட்டோகால்படிதான் குத்துவிளக்கேற்றப்பட்டது என மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பிரியா செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: தவெக எம்எல்ஏவை புறக்கணிக்கவும் இல்லை, அவமதிக்கவும் இல்லை. திருவிக நகரில் பள்ளிக் கட்டட விழாவுக்கு அந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் பல்லவியை அழைத்தோம்.

Mayor Priya Clarifies

காலை 8.45 மணிக்கு ஃபங்ஷன் என தெரிவித்திருந்தோம். அவர் 9 மணிக்குத்தான் வந்தார். நாங்கள் 8.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டோம். அவரை புறக்கணிக்க நினைத்திருந்தால் 8.30 மணிக்கெல்லாம் குத்துவிளக்கேற்றி இருப்போமே! அப்படியா செய்தோம்? எம்எல்ஏ வரும் வரை காத்திருந்துதானே நிகழ்ச்சியை தொடங்கினோம்.

அதில் வீடியோவை பார்த்தாலே தெரியும், ரிப்பன் கட் செய்த போது கூட அவர் ஒரு கத்தரிக்கோலை எடுத்து வெட்டிவிட்டார். அது போல் குத்துவிளக்கேற்ற மேயருக்கென ஒரு விதிகள் உள்ளன.

முதலில் மேயர் ஏற்றியதும், ஐஏஎஸ் அதிகாரி ஏற்ற வேண்டும், அதன் பிறகுதான் தொகுதி எம்எல்ஏ ஏற்ற வேண்டும். அவருக்கு பிறகு கவுன்சிலர் அல்லது சேர்மேன் ஏற்ற வேண்டும்.

Mayor Priya Clarifies

இந்த முறைபடிதான் நான் ஏற்றிவிட்டு, கேன்டிலை ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்தேன். அடுத்து எம்எல்ஏதான் ஏற்ற வேண்டும். ஆனால் அதற்குள் அவர் கோபித்துக் கொண்டு கிளம்பிவிட்டார். வேண்டுமென்றே பிரச்சினை செய்ய நினைப்பவர்களை என்ன சொல்ல முடியும். ஆனால் நாங்கள் எம்எல்ஏக்குரிய மரியாதையை தந்தோம் என பிரியா கேள்வி எழுப்பினார்.

குத்துவிளக்கு ஏற்றியதில் 'ஈகோ' யுத்தம்: சென்னையில் தி.மு.க - த.வெ.க இடையே வெடித்த புதிய அரசியல் மோதல்! மேயர் பிரியா - எம்.எல்.ஏ பல்லவி இடையே அரங்கேறிய அலட்சிய நாடகம்!

சென்னை மாநகராட்சியில் ஆளுங்கட்சியான தி.மு.க-விற்கும், புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (த.வெ.க) இடையே தற்போதும் தணலாய் எரியும் அரசியல் மோதல், ஒரு அரசு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும் விவகாரத்தால் பகிரங்கமாக வெடித்துள்ளது.

சென்னை மாநகர மேயர் ஆர். பிரியா மற்றும் த.வெ.க-வின் திரு.வி.க நகர் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர். பல்லவி ஆகிய இருவருக்குள் நடந்த 'ஈகோ' மோதல், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Mayor Priya Clarifies

புளியந்தோப்பு பகுதியில் அடுத்தடுத்து நடந்த இரு பள்ளி விழாக்கள் மற்றும் அதற்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள் இதோ:

ரவுண்ட் 1: பாதியில் வெளியேறிய த.வெ.க எம்.எல்.ஏ!

புளியந்தோப்பில் உள்ள அரசுப் பள்ளிப் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் இந்த மோதலின் முதல் அத்தியாயம் அரங்கேறியது.

விழாவின் தொடக்கமாகக் குத்துவிளக்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேயர் ஆர். பிரியா கையில் மெழுகுவர்த்தியை வைத்திருந்தார்.

அப்போது அருகில் நின்ற தொகுதி எம்.எல்.ஏ பல்லவி, விளக்கேற்றுவதற்காக மேயரிடம் மெழுகுவர்த்தியைக் கேட்டுள்ளார்.

ஆனால், மேயர் பிரியா, மெழுகுவர்த்தியை அவரிடம் தராமல், அருகில் நின்ற ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் நீட்டினார்.

மக்கள் பிரதிநிதியான தனக்கு அரசு விழாவில் நேர்ந்த இந்த அவமரியாதையால் கடும் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ பல்லவி, விழாவை பாதியிலேயே புறக்கணித்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறினார்.

ரவுண்ட் 2: சமாதானத்தை மறுத்த எம்.எல்.ஏ.

முதல் விழாவில் ஏற்பட்ட சர்ச்சை அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சமாதானப் படலம் அரங்கேற முயன்றது. அதே புளியந்தோப்பு பகுதியில் மற்றொரு தொடக்கப் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.

முந்தைய கசப்பான சம்பவத்தை ஈடுகட்டும் வகையில், இம்முறை மேயர் பிரியா கனிவோடு மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ பல்லவியிடம் நீட்டி விளக்கேற்ற அழைத்தார். ஆனால், பல்லவி அந்த மெழுகுவர்த்தியை வாங்க மறுத்துவிட்டார்.

மேயர் பிரியாவைத் திரும்பிப் பார்க்கக் கூட செய்யாமல், அவர் காட்டிய அதே அலட்சியத்தைத் தன்பக்கமிருந்து பதிலடியாகக் கொடுத்து அதிரவைத்தார் பல்லவி.

இந்த குத்துவிளக்கு மோதலுக்குப் பின்னால் 2026 சட்டமன்றத் தேர்தலின் பெரும் அரசியல் பகையே மறைந்துள்ளது.

கோட்டை சரிந்தது: சென்னை மாநகரத்தின் பாரம்பரிய தி.மு.க கோட்டையாகக் கருதப்பட்ட திரு.வி.க நகர் தொகுதியை, கடந்த 2026 சட்டசபைத் தேர்தலில் த.வெ.க வேட்பாளர் பல்லவி அதிரடியாகக் கைப்பற்றினார்.

உள்ளூர் அரசியல் பகை: தங்களின் சொந்தக் கோட்டையிலேயே த.வெ.க வென்றதை உள்ளூர் தி.மு.கவினராலும், மேயர் பிரியாவாலும் ஜீரணிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

புறக்கணிப்புக் குற்றச்சாட்டு: இதன் காரணமாகவே, தொகுதி எம்.எல்.ஏ-வான பல்லவிக்கு அரசு விழாக்களில் முறையான புரோட்டோகால் (Protocol) வழங்கப்படுவதில்லை என்றும், தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்படுவதாகவும் த.வெ.க தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

அரசு விழாக்களில் மக்கள் நலத்திட்டங்களை விட, தி.மு.க மற்றும் த.வெ.க-வினர் தங்களின் அரசியல் பலப்பரீட்சையைக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த புளியந்தோப்பு சம்பவமே சாட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில்தான் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+