இனி எல்லாமே ஆன்லைன்.. லைசன்ஸ் வாங்க ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.. அரசு அறிவிப்பு
சென்னை: இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக வாகனங்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ள நிலையில் இரண்டாவதாக தமிழ்நாட்டில் அதிக அளவில் வாகனங்கள் உள்ளன. அரசு பேருந்துகளின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடுதான் முதலில் உள்ளது. தமிழர்கள் பொதுவாகவே வாகன பிரியர்கள்.
இதனால்தான் என்னவோ தமிழ்நாட்டில் புதிய வாகனங்களின் விற்பனைகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னையிலும் அதிக அளவில் வாகன உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால் ஆர்டிஓ அலுவலகங்களிலும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

புதிய லைசன்ஸ்
புதிய லைசன்ஸ் வாங்குவது, லைசன்ஸ் புதுப்பிப்பது, லைசன்சில் புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்வது என்று பல காரணங்களுக்காக மக்கள் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் மக்கள் இதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதோடு லாக்டவுன் சமயத்தில் பலர் புதிய லைசன்ஸ் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அனைத்து சேவை
இந்த நிலையில்தான் இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இது தொடர்பான அறிவிப்புகள் வெளியான நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இதை உறுதி செய்துள்ளார். அதன்படி ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே ஆன்லைன் மூலம் பணிகளை மேற்கொள்ள முடியும்.

பழகுனர் உரிமம்
பழகுனர் உரிமம் (எல்எல்ஆர்), ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் (லைசென்ஸ்), ஓட்டுனர் உரிமத்தில் முகவரி மாற்றம் போன்ற அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும். அதேபோல் ஓட்டுனர் தேர்வு தளத்துடன் கூடிய சொந்த கட்டிடம் மதுரை மாவட்டம் (மதுரை தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு என்று தனியாக அமைக்கப்படும். இந்த கட்டிடம் ரூ.528 லட்சம் செலவில் கட்டப்படும். பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கும் வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்படும்.

திருவள்ளூர்
திருவள்ளூர் போக்குவரத்து கழகத்தில் இயங்கி வரும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு என்று சொந்த கட்டிடம் கட்டப்படும். மதுரையை போலவே கோவையிலும் இதற்காக தனி கட்டிடம் அமைக்கப்படும். கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ரூ.498 லட்சத்தில் கட்டப்பட்டு பல்வேறு சேவைகள் அங்கு வழங்கப்படும். எல்லா பணிகளும் இனி ஆன்லைனில் வழங்கப்படும்.

கணினிமயம்
இதை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறையில் அனைத்து ஊழியர்களும் கணினி பயன்படுத்தும் வகையில் கொடுத்தால் கணினிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு அரசு புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக 2,213 டீசல் பேருந்துகள், காற்று மாசைக் கட்டுப்படுத்த 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். ஜெர்மனி வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications