பாகிஸ்தானுடன் தோல்வி.. “நீ காலிஸ்தானி”- அர்ஷ்தீப் சிங் மீது பாய்ந்த மதவெறியர்கள்! கொந்தளித்த ஹர்பஜன்
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேட்சை தவறவிட்ட இளம் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கின் மதத்தை வைத்து அவரை காளிஸ்தான் என்று மதவெறியர்கள் விமர்சித்து வரும் சூழலில் விராட் கோலி, ஹர்பஜன் சிங் ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் இந்தியர்களின் ஆஸ்தான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட்தான். என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகள் கண்டுகளித்தால் அனைவரும் அதிகம் எதிர்பார்ப்பது ஒன்றைதான்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி
அதுதான் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி. பல்வேறு அரசியல் காரணங்களால் இருநாடுகளிடையே நேரடி தொடர் போட்டிகள் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்தியா வெற்றி
கடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கடந்த வாரம் நீண்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.

பாகிஸ்தான் வெற்றி
இந்த நிலையில் ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் இலக்கை கடந்து திரில் வெற்றியை பெற்றது.

அர்ஷ்தீப் சிங் மீது குறி
இந்த போட்டியின் கடைசி தருணத்தில் பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஆசிப் அலியின் கேட்சை இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தவறவிடுவார். இதனால் ஆத்திரத்தில் ரோகித் சர்மா மைதானத்திலேயே கத்தினார். இறுதியில் ஆசிப் அலி 8 பந்துகளில் 16 ரன்களை விளாச பாகிஸ்தான் வெற்றிபெற்றது. உடனே ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் மதவெறியர்கள் சிலர் அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தானி என்றெல்லாம் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

தோல்விக்கு காரணம்
அனுபவ வீரர்கள் புவனேஷ்வர் குமார், பாண்டியா, சாஹல் போன்றோர் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் கொடுக்க இளம் வீரரான அர்ஷ்தீப் சிங் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருப்பார். இந்தியாவின் தோல்விக்கு அணி தேர்வு, மிடில் ஆர்டர் சொதப்பல், முன்னணி பந்துவீச்சாளர்கள் சொதப்பல் என பல்வேறு முக்கிய காரணங்கள் இருக்க நெருக்கடியான நேரத்தில் அர்ஷ்தீப் சிங் தவறவிட்ட கேட்சை மட்டும் வைத்து 9 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடிய 23 வயது இளம் வீரரை கடுமையாக சாடி வருகிறார்கள்.

விராட் கோலி
இந்த நிலையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு விராட் கோலி, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து கோலி பேசியதாவது, "நெருக்கடியான நேரத்தில் யாரும் தவறு செய்வார்கள். இது பெரிய போட்டி. சூழலும் கொஞ்சம் நெருக்கடியாக சென்றுகொண்டிருந்தது. மூத்த வீரர்களிடம் இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த முறை இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது உங்களால் கேட்சை பிடிக்க முடியும்." என்றார்.

ஹர்பஜன் சிங்
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளதாவது, "இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள். யாரும் வேண்டுமென்றே கேட்சை தவறவிட மாட்டார்கள். எங்கள் அணியை கண்டும் நாங்கள் பெருமை கொள்கிறோம். பாகிஸ்தான் நன்றாக விளையாடியது. நமது அணியினரையே கேவலமான விசயங்களை சொல்லி இந்த தளத்தில் இழிவுபடுத்துபவர்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. அர்ஷ் ஒரு தங்கம்." என்று பதிவிட்டுள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க












Click it and Unblock the Notifications