தக்காளி.. தக்காளி.. ரேஷன் கடைகளில் நடந்த சம்பவம்.. அதிகாலையிலேயே இப்படியா.. ப்பா ஷாக்!
சென்னை: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்தியா முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.
ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. நேற்று 100 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று மேலும் 20 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தக்காளி விலை காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
காலையிலேயே மக்கள் வந்து லைனில் நிற்க தொடங்கி விடுகிறார்கள். 9 மணிக்கு ரேஷன் கடை திறந்தாலும் கூட 8 மணிக்கே மக்கள் வந்து லைனில் இருக்கும் நிலை உள்ளது. இன்று சென்னையில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட 90 ரேஷன் கடைகளிலும் 20 - 30 அடிக்கு நீண்ட லைன் நின்றது. வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் கூடுதல் தக்காளி இதனால் விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற பொருட்கள்: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்விற்கு இடையில் தற்போது துவரம் பருப்பின் விலையும் உயர்ந்து உள்ளது. தக்காளி இல்லாமல் கூட தமிழ்நாட்டில் குடும்பம் நடத்திவிடலாம். ஆனால் துவரம் பருப்பு மிகவும் அவசியம். அதிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு துவரம் பருப்பு மிக முக்கிய புரத சத்து கொடுக்கும் பொருள்.
அதன் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. கடந்த வாரம் 70-90 ரூபாய்க்கு விற்ற பருப்பு தற்போது 50-60 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. அண்டை மாநிலங்களில் விளைச்சல் கம்மியாக இருப்பதால் பருப்பு விலை உட்பட மளிகை பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில்தான் ஏற்கனவே ரேஷனில் வழங்கப்படும் தக்காளி, துவரம் பருப்புடன் சேர்த்து மற்ற மளிகை பொருட்கள் ரேஷனில் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மீன் விலை: இன்னொரு பக்கம் மீன் விலையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன் பிடிப்பு அமலுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், அடுத்த சீசனுக்கு மீன்கள் கடலில் இருக்கவும் மீன்பிடி தடைக்கலாம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்த தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இந்த காலத்திற்கு பின் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள்.
அது போன்ற சமயங்களில் மீன் வாங்க பலரும் ஆசைப்படுவதால் மீன் விலையும் அதிகமாக இருக்கும். மீன் பிடி தடைக்காலத்திற்கு பின் வரிசையாக பலரும் மீன் வாங்குவதற்காக முந்தி அடிப்பதால் மீன் விலை அதிகமாக இருக்கும்.
ஆனால் இந்த முறை வழக்கத்தை விட அதிக அளவில் மீன் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. காரணம் மீன் பிடி தடை காலத்திற்கு பின்பும் பெரிதாக மீன் வரத்து இல்லை. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பெரிதாக மீன் பிடிக்காமல் குறைந்த அளவு மீன்களுடன் திரும்பி வருகின்றனர்.
மக்கள் பலரும் மீன்களை வாங்குவதற்காக முட்டிமோதிக்கொண்டு இருக்கும் நிலையில் மீன் வரத்து பெரிதாக இல்லை. கடலுக்கு சென்ற மீனவர்கள் பலரும் குறைந்த அளவு மீன்களோடு வந்ததால் ஞாயிற்றுக்கிழமை, திங்கள் கிழமை மீன் விலை மிக அதிகமாக இருந்தது.
ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 1400 ரூபாய் வரை கூட பல இடங்களில் விற்றது. சாலை, மத்தி, சங்கரா மீன்களின் விலையும் மிக அதிகமாக இருந்தது. சாதாரணமாக விற்கும் மீன்களின் விலையை விட நேற்றும், இன்று காலையும் மீன்களின் விலை 100 - 200 ரூபாய் அதிகம் இருந்தது. இந்த திடீர் விலை ஏற்றம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications