தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம்..ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
சென்னை: இந்தியாவில் தொடர்ந்து ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை ஒடுக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டும்தான். தடுப்பூசி ஒன்றுதான் கொரோனாவை முழுமையாக ஒழிக்கும்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு பிரதானமாக போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போடுவதில் தொடக்க காலத்தில் தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிகுந்த ஆர்வதத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஆனால் பிரதமானமாக 2 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதால் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் மையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் தடுப்பூசி இல்லாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
நிலைமை இப்படியிருக்க தமிழ்நாட்டில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வுகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடதப்பட்டது. தொற்று அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 80.3 சதவீத ஆண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
18 முதல் 44 வயதுடையர்கள் 16.9 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டியுள்ளனர். , 45 முதல் 60 வயதுடையவர்கள் 18.2 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27.6 சதவீதம் பேர் தடுப்பூசி குறித்து மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் நகர் புறங்களில் 82.5 சதவீதம் பேரும், கிராம புறங்களில் 79.7 சதவீத பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications