சிகரம் தொடும் மகர ராசி.. வைகாசி மாதத்தில் வரப்போகும் அற்புதமான நன்மைகள்.. முழு பலன்கள் இதோ

Subscribe to Oneindia Tamil

Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மகரம் வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

magaram-what-kind-of-benefits-will-magaram-rasi-people-get-during-this-vaikasi-month

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் மகர ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசியினருக்கு துணையின் ஆரோக்கியத்தை வரக்கூடிய ஒரு வருடத்திற்கு கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு செய்வது, பிறர் குடும்பத்தில் நீங்கள் தலையீடு செய்வது கூடாது. மற்றபடி அனைத்து விதமான ஏற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். நினைக்காத காரியங்கள் எல்லாம் நடக்கும்.

வாகன யோகம்

புதிய வண்டி வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு, புது இடம், புது அனுகூலம் என ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தொழிலில் மாற்றம் ஏற்படும். அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும்.

மன தைரியம்

இந்த வைகாசி மாதம் கலவையான அனுபவங்களை தரக்கூடியதாக இருக்கும். வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும் மன தைரியத்துடன் அனைத்தையும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குறிப்பாக பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகள் மனநிறைவை தரக்கூடும். அவர்களின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் பெருமையை ஏற்படுத்தும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெறக்கூடிய சூழல் அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு இந்த மாதம் சவால்கள் இருந்தாலும் கடின உழைப்பின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கவனத்துடன் படிப்பில் ஈடுபட்டால் எதிர்பார்த்த பலனை அடையலாம்.

பொருள் சேர்க்கை

முக்கியமான பணிகள் மற்றும் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். முதலீடு மற்றும் பண விஷயங்களில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டால் நல்ல பலன்களை பெற முடியும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். எல்லா விதமான நன்மைகளும் காணப்படும்.

வழிபாடு

உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலம் காணப்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளையார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+