ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளிக்க போகும் மனுவால் விஜய்க்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகப் பொறுப்பு கவர்னர் அர்லேக்கரை சந்திக்க லோக் பவனில் நேரம் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. சந்திக்க நேரம் கொடுக்கும் பட்சத்தில் முக்கிய தலைவர்களுடன் சென்று கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. நேரம் ஒதுக்கப்படும் படசத்தில், கவர்னரை சந்திக்கும்போது, ''அதிமுக கட்சியை உடைக்க ஆளும் கட்சி முயற்சிக்கிறது. பிளவுப்படுத்தும் எம்.எல்.ஏ. க்களுக்கு அமைச்சர் பதவிகள், வாரியப் பதவிகள் தருவதாகச் சொல்லி குதிரை பேரம் நடத்தியுள்ளனர் என பல்வேறு தகவல்கள் அடங்கிய மனுவினை எடப்பாடி பழனிசாமி அளிக்க உள்ளார். அந்த மனுவின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் விஜய்க்கு சிக்கல் வரும் என்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்பு அதிமுக. 2 அணிகளாக உடைந்திருக்கிறது. தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியுமாக செயல்பட்டு வருகிறார்கள்.

Vijay Faces Trouble Due to the Petition Edappadi Palaniswami Is Set to Submit to the Governor

சட்டமன்றத்தில் கடந்த மே 13ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எதிர்த்து வாக்களிகும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், எஸ்பி.வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சி.வி.சண்முகம், எஸ்பி.வேலுமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து புதிதாக 26 மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், எங்களை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என சி.வி.சண்முகம் தரப்பினர் தெரிவித்தனர். அதிமுக. பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க வேண்டுமென எஸ்பி.வேலுமணி தரப்பினர் கூறி வருகிறார்.

இரு தரப்பும் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து, தாங்கள் வைத்துள்ள கோரிக்கையின்படி, பேரவையின் அதிமுக குழு தலைவர் மற்றும் கொறடா உள்ளிட்டவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகரோ, இதில் எந்த முடிவையும் எடுக்காமல், அதிமுகவின் கோரிக்கைகள் குறித்த விசயம் எனது ஆய்வுக்கு உட்படுத்தப்பட் டுள்ளது. என் ஆய்வில் அவர்களின் பிரச்சனை இருக்கிறது'' என்று சொல்லியி ருக்கிறார். சபாநாயகரின் முடிவு தங்களுக்கு எதிராக இருக்குமோ என அச்சப்படுகின்றனர் எடப்பாடி உள்ளிட அதிமுக ஆதரவாளர்கள்.

இந்த நிலையில் தான், கவர்னரை சந்தித்து முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் பொறுப்பு கவர்னர் அர்லேக்கரை சந்திக்க லோக் பவனில் நேரம் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. சந்திக்க நேரம் கொடுக்கும் பட்சத்தில் முக்கிய தலைவர்களுடன் சென்று கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும் படசத்தில், கவர்னரை சந்திக்கும்போது, ''அதிமுக கட்சியை உடைக்க ஆளும் கட்சி முயற்சிக்கிறது. பிளவுப்படுத்தும் எம்.எல்.ஏ. க்களுக்கு அமைச்சர் பதவிகள், வாரியப் பதவிகள் தருவதாகச் சொல்லி குதிரை பேரம் நடத்தியுள்ளனர்.

அதனால், அவர்களை சபாநாயகர் அங்கீகரிக்கக்கூடாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் கடிதத்தை ஏற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்டுள்ளவர்களை சட்டப்பேரவையின் அதிமுக குழு நிர்வாகிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று சபாநாயக ருக்கு வலியுறுத்த வேண்டும். குதிரை பேரம் நடத்தப்பட்டிருப்பதால் அதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேன்மை தாங்கிய கவர்னர் அவர்கள் எடுக்க வேண்டும்'' என்று கவர்னரிடம் புகார் கொடுக்கவிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக எடப்பாடி அணியில் பேசப்படும் ஹாட் டாபிக் தற்போது இது தான் !

சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+