Kumba Rasi Palan: கும்ப ராசிக்கு அதிரடி மாற்றங்கள்.. நினைத்தது எல்லாம் நடக்கப் போகுது!
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் கும்ப ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் கும்ப வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் கும்ப ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு எதிரிகளை தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகத்தில், வியாபாரத்தில், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்குகளை காப்பாற்றக்கூடிய அமைப்பு ஏற்படும். சுப விரயங்கள் காணப்படும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய மாதம். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். இருப்பினும், அவை சுப செலவுகளாக இருக்கும்.
மகிழ்ச்சி
எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய அமைப்பு உள்ளது. புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இந்த வைகாசி மாதம் முதல் நல்ல மாற்றங்கள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. உங்களுக்கு இந்த வைகாசி மாதம் வசதிகளும் மகிழ்ச்சியும் அதிகரிக்கக்கூடிய காலமாக இருக்கும்.
தொழில்
குடும்ப வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் நிலவும். வீட்டில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து மனநிறைவு ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய வாய்ப்புகள் உருவாகும். லாபம் அதிகரிக்கும் சூழல் காணப்படும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைத்து தன்னம்பிக்கை உயரும்.
ஒற்றுமை
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை தரும். திருமணமானவர்களுக்கு இந்த காலம் மகிழ்ச்சியும் புரிதலும் நிறைந்ததாக அமையும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
வழிபாடு
ஓய்வு, உணவு பழக்கம் மற்றும் உடல்நல பராமரிப்பில் அக்கறை காட்டினால் இந்த மாதத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ரத்தத்தில் பரவக்கூடிய தொற்றுநோய் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications