"பஸ் ஏன் சார் லேட்டா எடுக்கறீங்க?".. பெண் பயணி கேட்டதுதான் தாமதம்.. டிரைவர் தாக்கியதாக புகார்
சென்னை: பேருந்தை தாமதமாக எடுத்ததை தட்டிக் கேட்ட பெண்ணை பேருந்து ஓட்டுநர் அடித்து தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருமதா. இவரும் இவருடைய கணவர் செந்திலும் பாரிமுனை செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றுள்ளனர்.
அங்கு 5.10-க்கு பெரும்பாக்கத்தில் இருந்து பாரிமுனை செல்ல வேண்டிய பேருந்தை 5.30 மணி ஆகியும் எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கண்டிப்பு
இதுகுறித்து ஓட்டுநரிடையே கேட்டபோது அவர் மிகவும் கண்டிப்பாக காத்திருங்கள். இல்லையென்றால் இறங்கி போய்கிட்டே இருங்கள் என சொல்லிவிட்டு டிரைவர் ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால் தம்பதி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெண் மயக்கம்
இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி அவர்களை தாக்கியதில் முருமதா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட மற்ற பொது மக்கள் பேருந்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சரியா
மேலும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததினால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில் பேருந்து புறப்பட தாமதம் ஏன் என கேட்டது ஒரு தவறா? அதற்கு போய் அந்த ஓட்டுநர் அந்த தம்பதியை கண்டபடி பேசி தாக்கியுள்ளார். பெண் என்றும் பாராமல் இப்படி தாக்குவது சரியா?

அலைகழிப்பு
இப்படித்தான் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பயணிகளை அலைக்கழித்து வருகிறார்கள். பேருந்து எப்போது எடுப்பீர்கள் என்றோ எத்தனை மணிக்கு போய் சேரும் என கேட்டாலோ டிரைவர் கொந்தளித்து விடுகிறார். அது போல் டிக்கெட்டுக்கு கொடுத்த காசில் மிச்சம் சில்லறை கொடுங்கள் என நடத்துநரிடம் கேட்டால் போதும், அவரும் பயணிகளை வறுத்தெடுப்பார் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இனியாவது பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications