சென்னை கொரட்டூரில் நள்ளிரவில் குலுங்கிய கட்டடம்.. நள்ளிரவில் நடந்தது என்ன? குடியிருப்புவாசிகள் பகீர்
சென்னை: தலைநகர் சென்னையில் கொரட்டூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் வீடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நகர் மேம்பாட்டு அறக்கட்டளை என்ற பெயரில் 1947ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தான் பின் காங்கிரஸ் ஆட்சியில் 1961இல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதில் தமிழ்நாடு முழுக்க வீட்டு மனைகள், வீடுகளைக் கட்டி குறிப்பிட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் என்று 4 பிரிவுகளாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படும்.

வீட்டு வசதி வாரியம்: இருப்பினும் கடந்த சில காலமாகவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகள் தரமானதாக இல்லை என்ற புகார் இருந்து கொண்டே தான் இருக்கிறது. கேபி பார்க் உள்ளிட்ட பல இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பாதுகாப்பானதாக இல்லை என்பதை மக்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அருகில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் அரசு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அது ஏற்கனவே பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பல குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன. இதற்கிடையே இன்று காலை அங்கே திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரட்டூர்: நில அதிர்வு காரணமாக அச்சமடைந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், தங்கள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த திடீர் நில அதிர்வுக்கு என்ன காரணம் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அதேபோல இதனால் கட்டிடத்தில் எதாவது மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.
இது குறித்துக் குடியிருப்பு வாசிகள் கூறுகையில், "இங்கே கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். நள்ளிரவு 1 மணியளவில் 6ஆவது மாடிக்கு மேல் இருந்து வீடுகள் குலுங்கியுள்ளன. நள்ளிரவு நேரம் என்பதால் முதலில் பலரும் தங்கள் வீடுகளில் மட்டுமே இப்படி இருந்ததாக நினைத்துள்ளனர். அதன் பின்னரே அங்கு அனைத்து வீடுகளும் குலுங்கியுள்ளது தெரிய வந்தது. 44, 45 என இரண்டு பிளாக்கிலும் இதே நிலை தான்.
அதன் பின்னரே குடியிருப்புவாசிகள் அனைவரும் கீழே வந்தோம். முதலில் நிலநடுக்கம் என்றே நினைத்தோம். ஆனால், விசாரித்த போது தான் தெரிந்தது கொரட்டூரில் வேறு எங்கும் இதுபோல நில அதிர்வு இல்லை என்று. எங்கள் இரண்டு பிளாக்கில் மட்டுமே அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு அங்கே செல்லவே அச்சமாக இருக்கிறது.
பல பிரச்சினைகள்: கடந்த 2019ஆம் ஆண்டிலேயே இந்தக் கட்டிடத்தில் சில பாதிப்புகள் இருந்தன. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட போதே இப்படியொரு பிரச்சினை இருந்ததால், இது குறித்து புகார் அளித்தோம். அப்போது பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வந்து குவாலிட்டி செக் எல்லாம் செய்தார்கள். அவர்கள் அப்போது பிரச்சினை இல்லை என உறுதியளித்தார்கள். இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த இரண்டு கட்டிடங்களில் மட்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஏன் இந்தளவுக்கு அதிர்வு ஏற்பட்டது எனத் தெரியவில்லை. நிலநடுக்கம் என்றால் கூட அது முடிந்துவிட்டால் தைரியமாக உள்ளே செல்லலாம். ஆனால், இங்கே என்ன பாதிப்பு என்றே தெரியவில்லை. இதனால் மீண்டும் உள்ளே செல்ல தயக்கமாக இருக்கிறது. என்ன பிரச்சினை என்று வல்லுநர்கள் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
கழிவுநீர் ஆலை: அருகில் இருக்கும் கழிவுநீர் ஆலையில் இருந்து வரும் கேஸ் எங்கள் வீடுகளில் இருக்கும் மின்சாதன பொருட்களையும் பாதிக்கிறது. அதைத் தடுக்க அரசு ஷீட் ஒன்றைப் போட்டுக் கொடுத்தது. இருப்பினும், அதுவும் கூட இரண்டு ஆண்டுகளில் முற்றிலுமாக துருப்பிடித்துப் போய்விட்டது. அந்தளவுக்குக் கழிவுநீர் ஆலையில் இருந்து வரும் கேஸ் வலிமையானதாக இருக்கிறது. அதன் காரணமாகப் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்றும் அச்சமாக இருக்கிறது.
உள்ளே விரிசலும் கூட ஏற்பட்டுள்ளது. உள்ளே 222 குடும்பங்கள் உள்ளன. வல்லுநர்கள் உத்தரவாதம் அளிக்கும் வரை உள்ளே செல்ல மாட்டோம். ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் இருக்க முடியாது. 9ஆவது மாடியில் இருந்து பார்த்தால் கீழ்த் தளம் தெரியும் அளவுக்கு பெரிய விரிசல் இருக்கிறது" என்றார்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications