Petrol Diesel: ஏதாச்சும் பண்ணுங்கய்யா.. எங்களால தாங்க முடியலை.. குமுறும் மக்கள்!
சென்னை: ஒரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. மறுபக்கம் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயருகிறது. இதை எங்களால் தாங்கிக்கவே முடியலை என்று அப்பாவி பொதுமக்கள் வேதனையுடன் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.
இதன் பின்னர், கடந்த மார்ச் மாதத்தில் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.

கிடுகிடு உயர்வு
தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி 100 ரூபாயைத் தாண்டி பெட்ரோல் விலை போய் விட்டதால் மக்கள் குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மக்களின் குமுறல்
கொரானா ஊரடங்கு நேரத்தில் இது போன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது மிகவும் வேதனையாக உள்ளது என போதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஏற்கனவே ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுகிறோம் .

குறைக்க வேண்டும்
இந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது, இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது எனவே அரசு இதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

மும்பையில் 105
மும்பையில் பெட்ரோல், மற்றும் டீசல் விலை முறையே ரூ.105.92 , 96.91- ஆக விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ. 99.84-ஆக உள்ளது. டீசல் விலை 92.27ஆக இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம், போபால் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100- ஐ தாண்டியுள்ளது.

ராஜஸ்தானில்தான் உச்சம்
நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.80- க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.36-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4.93-ம் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 11-ம் டீசல் விலை 12-ம் உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications