பெண்களை மதிக்காதோருக்கு பாஜகவில் இடமில்லை.. திருச்சி சூர்யாவை மறைமுகமாக சாடிய அமர் பிரசாத் ரெட்டி
சென்னை: கூடிய விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உண்மை பிம்பம் உடையும் என பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்த நிலையில், அவரை மறைமுகமாக சாடும் வகையில் அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில், பாஜக மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். தன்னை அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக திருச்சி சூர்யா சிவா காட்டிக் கொண்டார். இந்த நிலையில், பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவருடன் பேசிய செல்போன் உரையாடல் அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா சிவாவுக்கும், டெய்சிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவிற்கும் இந்த விவகாரம் அதிர்வுகளை கொடுத்தது. டெய்சியை தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு திட்டிய திருச்சி சூர்யா, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ விவகாரம் அண்ணாமலைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சூர்யா சிவாவை பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆணையிடுவதாகவும் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து சூர்யா சிவாவும் டெய்சியும் சமாதானமாவதாக அறிவித்தனர். இந்த நிலையில் சூர்யா சிவாவை கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்தார் அண்ணாமலை. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக தனது ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.
பெண்களை மதிக்காதோருக்கு, பாலியல் சீண்டலில் ஈடுபடுவோருக்கு, எப்போதும் போதையில் மிதப்போருக்கு, அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுப்போருக்கு, திமுகவுடன் கள்ள உறவு வைத்திருப்போருக்கு என்றுமே பாஜகவில் இடமில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு!
— Amar Prasad Reddy (@amarprasadreddy) July 30, 2023
இந்த நிலையில் இன்று திருச்சி சூர்யா சிவா, அண்ணாமலைக்கு எதிராக திடீரென தனது ட்விட்டரில் பதிவிட்டார். அதாவது, அதில், "கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம்.
நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன் ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது. கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும்." என்று பதிவிட்டு இருந்தார். அண்ணாமலைக்கு எதிரான திருச்சி சூர்யா சிவாவின் பதிவு பாஜகவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவராக இருப்பவரும் அண்ணாமலையின் வலதுகரம் என்று கட்சியினரால் சொல்லப்படும் அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா சிவாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அமர்பிரசாத் ரெட்டி கூறியிருப்பதாவது:-
பெண்களை மதிக்காதோருக்கு, பாலியல் சீண்டலில் ஈடுபடுவோருக்கு, எப்போதும் போதையில் மிதப்போருக்கு, அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுப்போருக்கு, திமுகவுடன் கள்ள உறவு வைத்திருப்போருக்கு என்றுமே பாஜகவில் இடமில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு!" என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications