Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வாழும் வெளியூர் மக்களா? அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியை கவனித்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு முறையீடு இல்லாமலேயே நிவாரணம் கிடைக்கும் போது, வெளியூர் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அதாவது சென்னைக்கு ரேஷன் அட்டை முகவரி மாற்றாமல் பல ஆண்டுகளாக வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையீடு செய்ததால் தான் நிவாரணம் கிடைக்குமா? என பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னையில் உள்ள அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது உடமைகள் பலவற்றை இந்த மழை வெள்ளத்தில் தொலைத்துவிட்டு தவிக்கிறார்கள். கட்டில், பீரோ, மெத்தை, டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, கார், இருசக்கர வாகனம், மின் மோட்டார்கள், மின் சாதனங்கள், படகுகள் எல பல பொருட்கள் வீணாகி போய் இருக்கிறது.

People who have ration cards outside Chennai are worried about the announcement of the government

இதேபோல் வீடுகளுமே நிறைய பாதிப்பை சந்தித்துள்ளன. பலர் வீட்டின் சுவர்களையே இழந்துள்ளனர். இந்த மழை பாதிப்பால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்ததுடன், வேலைக்கு போக முடியாமல் சாப்பாட்டிற்கு கடினமான நிலையை எதிர்கொண்டுள்ளனர். அரசு நிவாரண உதவித்தொகையை இவர்களுக்காக அறிவித்துள்ளது.

ரூ.6000 உதவித்தொகை சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த உதவி தொகை ஓரளவு ஆறுதலாக இருக்கும் என்று மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அதேநேரம் ரேஷன் அட்டை இல்லாமல் பலரும் சென்னையில் குடியிருக்கிறார்கள். சொந்த ஊரில் ரேஷன் கார்டு வைத்துக்கொண்டு, சென்னைக்கு முகவரி மாற்றாமல் அப்படியே வசித்து வருகிறார்கள்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் எங்கு வேண்டுமானாலும் ரேஷனில் பொருள் வாங்கலாம் என்பதால் ரேஷன் கார்டை பலர் முகவரி மாற்றவில்லை... சென்னையில் வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். சொல்லப்போனால் அவர்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. வாழ்வாதாரத்தை தொலைத்த அவர்களுக்கும் அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும் போது, புயலுக்கு பின் அரசு எடுத்த நடவடிக்கைகளால் இன்றைக்கு பெருமளவு இயல்பு வாழ்க்கை திரும்பி இருக்கிறது.மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

2015-ம் ஆண்டு மழை நிவாரண பணிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 250 கோடி நிதி வேண்டும் என்று அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் கேட்டார். அன்றைக்கு அவர் மக்களுக்கு நிவாரணத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கினார்.. இன்றைக்கு நாம் ரூ.5,200 கோடிதான் கேட்டிருக்கிறோம். ஆனால் ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்குகிறோம் என்றார். அப்போது செய்தியாளர்கள் சென்னையை பொறுத்தவரையில் எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையை பொறுத்தவரையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த நிவாரண தொகை வழங்கப்படும். இதற்கு 'டோக்கன்' வழங்கும் பணி 16-ந்தேதி தொடங்கும். அடுத்த 10 நாட்களில் இந்த பணி நிறைவடையும். மற்ற மாவட்டங்களை பொறுத்தவரையில் (திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு) பாதிக்கப்பட்ட வட்டங்களில் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை கிடைக்கும் என்றார்.

சென்னையில் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த பலரிடம் ரேஷன் அட்டை இருக்காது. அவர்களுக்கு எப்படி நிவாரணம் வழங்கப்படும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நிவாரண தொகை வழங்குவதற்கான ஆதாரமாக தற்போது ரேஷன் அட்டை முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்கள் அரசிடம் முறையீடு செய்யலாம் என்றார்.

People who have ration cards outside Chennai are worried about the announcement of the government

அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பின் படி பார்த்தால், சென்னையில் ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு முறையீடு இல்லாமலேயே நிவாரணம் கிடைக்கும் போது, வெளியூர் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அதாவது சென்னைக்கு ரேஷன் அட்டை முகவரி மாற்றாமல் பல ஆண்டுகளாக வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையீடு செய்ததால் தான் நிவாரணம் கிடைக்குமா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சென்னையில் வசிக்கும் வெளியூர் ரேஷன் கார்டு தாரர்களுக்கும், உரிய ஆவணங்களை காட்டி நிவாரணம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் 2015ம் ஆண்டு வெள்ளத்தின் போது, வீடு வீடாக வந்து கணக்கெடுத்த அதிகாரிகள், சென்னை குடும்பத்துடன் வசித்த அனைவருக்குமே 5000 ரூபாய் வங்கி கணக்கில் வழங்கப்பட்டது. எனவே சென்னையில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+