சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா.. கையெடுத்து கும்பிட்டு குமுறி அழுத பெண்கள்
சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரணைக்காக சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து சென்ற போது சாலையில் கூடியிருந்த மக்கள் அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டனர். மேலும் அங்கிருந்த பெண்கள் குமுறி அழுதனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் புகார் அளித்தனர்.
ஏழை மாணவிகள், ஹாஸ்டல் மாணவிகளை சொகுசு அறைக்கு வரவழைத்து அவர்களிடம் பாலியல் சீண்டல் செய்து பின்னர் அவர்களின் வாழ்வை நாசமாக்குவதுதான் இந்த பாபா செய்த வேலை என புகார்கள் மூலம் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலம் சென்ற சிவசங்கர் பாபா , அங்கிருந்து டெல்லி தப்பிச் சென்ற போது சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

காவல்
இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்த அவரை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சுஷில் ஹரி சர்வதேச பள்ளிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

கையெடுத்து கும்பிட்ட மக்கள்
அப்போது அவர் வருவது தெரிந்து சாலைகளில் அப்பகுதி மக்கள் கூடினர். அவரை பொதுமக்கள் தாக்கிவிடக் கூடாது என போலீஸார் பாதுகாப்பை அதிகரித்தனர். ஆனால் மாறாக அவரை பார்த்த மக்கள் கையெடுத்து கும்பிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்
இந்த சம்பவத்தை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கொந்தளித்துள்ளனர். சிறு குழந்தை என்று கூட பார்க்காமல் 6 ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு மாணவிகளிடம் கூட அத்துமீறிய இந்த சிவசங்கர் பாபாவுக்கு இத்தனை வரவேற்பா என இணையத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications