கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையின்றி சூட்கேசில் கிடந்த சடலம் தொடர்பான வழக்கில், கொல்லப்பட்டவரின் தலை செங்கல்பட்டு ஏரி பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. கொல்லப்பட்ட அமீர் அலியின் மனைவி கைதான நிலையில், அவர் விசாரணையில் அளித்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் ரயில் நிலையத்தில், சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத உடல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸார் சூட்கேஸில் கிடந்த உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பெரம்பூர் ரயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

Perambur Suitcase Murder

பின்னர், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இது குறித்து, ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், ஓட்டேரி போலீஸார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக் குமார் தலைமையில் 6 தனிப்படைகளும், ரயில்வே போலீசார் தலைமையில் 2 தனிப் படைகள் உட்பட 8 தனிப் படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலில் ஆண்கள் பயன்படுத்தும் ஷார்ட்ஸ் ஒன்று இருந்தது. அந்த துணியில் பிராண்டட் துணிகளில் பயன்படுத்தப்படும் பார்கோடு இருந்தது. அந்த பார்கோடை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது பெரம்பூர் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் கடையில் எடுக்கப்பட்ட துணி என்பது தெரிய வந்தது. அதனை வைத்து போலீசார் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த துணியை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டு பேர் வந்து வாங்கியது தெரியவந்தது. இரண்டு பேரின் தொலைபேசி எண்ணையும் போலீசார் தொடர்பு கொண்டபோது ஒருவர் போனை எடுத்துப் பேசி உள்ளார். அவர் உயிரோடு உள்ளார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட போலீசார் மற்றொருவருக்கு போன் செய்தபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் போலீசாருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது.

அந்த செல்போன் எண்ணின் கால் டேட்டா ரெக்கார்டுகளை ஆய்வு செய்தனர். ஒரு பெண் அதிகமாக அந்த நம்பரில் பேசி இருப்பது தெரிய வந்தது. அந்தப் பெண்ணின் நம்பருக்கு போன் செய்தால் அந்த நம்பர் சுவிட்ச் ஆப் என வந்தது. இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நம்பரில் இருந்த வாட்ஸ் அப் மட்டும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து, அந்த செல்போன் நம்பர்ன் இருப்பிடத்தை கண்டறிந்து, விசாரணை நடத்தியதில் அந்தப் பெண், அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும் புற்றுநோயாளிகளுக்கு வீடு பிடித்துக் கொடுப்பது, அவர்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோகிமா (36) கைது செய்யப்பட்டார். அவரது கணவர் அமீர் அலி (37) தான் கொல்லப்பட்டவர் என்பது தெரியவந்தது.

2022 முதல் ரோகிமா மற்றும் அமீர் அலி தேனாம்பேட்டை பகுதியில் வீடு எடுத்து ஒன்றாக தங்கி வந்துள்ளனர். உயிரிழந்த அமீர் அலிக்கு வேறு சில பெண்களோடும் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அவரது மனைவி ரோகிமா தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ரோகிமாவுக்கு தி.நகர் பகுதியில் வசித்து வரும் அஷ்ரப் (31) என்பவர் பழக்கமாகியுள்ளார். அஷ்ரப் என்பவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கு காய்கறி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததுள்ளது. ரோகிமா அசரப்பிடம் தனது கணவர் அடிக்கடி தன்னை சித்ரவதை செய்வதாக கூறியுள்ளார். அதற்கு அஷ்ரப் அவனை விட்டுவிட்டு என்னுடன் வந்து விடு, நாம் ஒன்றாக வாழலாம் என கூறியுள்ளார்.

ரோகிமா அவனை விட்டு உன்னுடன் வந்தால் அவன் என்னை கொன்று விடுவான், அதற்கு பதிலாக அவனை கொன்று விடலாம் என்று கூறி கடந்த 3ம் தேதி இரவு அமீர் அலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவனை படுக்க வைத்துள்ளனர். அன்று இரவு அரிவாள்மனையை எடுத்து அமீர் அலி கழுத்தை அறுத்து, அவரது உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி எடுத்துள்ளனர். கை, கால்களை வெட்டி ஒரு தனி பேக் செய்துள்ளனர். தலையை வெட்டி தனியாக பேக் பெய்துள்ளனர்.

5ம் தேதி காலை 6 மணி அளவில் ரேபிடோ மூலம் ஆட்டோ புக் செய்து உடலை பெரம்பூர் ரயில் நிலையம் 5வது பிளாட்பாரத்திற்கு கொண்டு சென்று வைத்துவிட்டு சென்றுள்ளனர். மேலும் தலையை செங்கல்பட்டு பகுதிக்கு சென்று புதைத்து விட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தலை எங்கு உள்ளது என்பதை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கொல்லப்பட்டவரின் தலை செங்கல்பட்டு ஏரி பகுதியில் புதரில் இருந்து இன்று மீட்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+