சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசை, ஆளுநர் மதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்திய பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு: டிடிவி தினகரன் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்து செயல்படவேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Perarivalan விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன்.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    31 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் விடுதலை.. ஆனந்தக் கண்ணீரில் மூழ்கும் ஜோலார்பேட்டை வீடு 31 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் விடுதலை.. ஆனந்தக் கண்ணீரில் மூழ்கும் ஜோலார்பேட்டை வீடு

    ஆளுநர் நடவடிக்கை

    ஆளுநர் நடவடிக்கை

    பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கதக்கது. அற்புதம்மாள் என்ற தாய் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.

    ஆளுநரின் நடவடிக்கை

    ஆளுநரின் நடவடிக்கை

    ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்து செயல்படவேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. 'தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி' என்பதை உணர்ந்து எதிர்காலத்திலாவது இத்தகைய பிரச்னைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் முடிவெடுக்கவேண்டும். பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Perarivalan verdict underscores need for governor to respect government - TTV Dinakaran: ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்து செயல்படவேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X