Periyar: வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!
சென்னை: தந்தை பெரியாரை இழிவாக பேசிவரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளவன், அவரது தந்தை குயில்தாசன் உள்ளிட்டோர் அனைவருமே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு பொதுமேடையிலும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பங்கேற்பது இல்லை.

பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட குயில்தாசன் பொதுவாக அரசியல் மேடைகளில் பேசுவதும் இல்லை. திருப்பத்தூரில் பெரியாரிய ஆய்வறிஞர் ஆனைத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் பங்கேற்று பேசினார்.
இவ்விழாவில் பேசிய குயில்தாசன், பேரறிவாளன் கைது செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டார். அந்த துயர காலங்களில் துணையாக இருந்த பலரையும் நினைவுபடுத்தி பேசினார் குயில்தாசன். மேலும் திருப்பத்தூர் நகரம் எப்படி எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியாக இருந்தது என்பதையும் விவரித்தார் குயில்தாசன்.
அப்போது, தந்தை பெரியாரையும் ஆனைமுத்துவையும் எதிர்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தங்களது பிள்ளைகளுக்கோ தங்களுக்கோ அரசு கல்வியிலும் பணியிலும் இடஒதுக்கீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள். பெரியாரையும் ஆனைமுத்துவையும் திட்டினால் அவங்க செய்ததை மட்டும் ஏற்றுக் கொள்வீர்களா? அதனால்தான் நீங்கள் விட்டுவிடுங்கள்.. மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
சினிமாவில் ஒரு நகைச்சுவை காட்சி வரும்..கொய்யால.. காசு கொடுத்ததற்கு மேல பேசுகிறார் என்கிற வசனம் வரும்.. அந்த மாதிரி பேசுகிறார்கள் (சீமான் பெயரை குறிப்பிடாமல்).. பெரியார் எனும் கிழவனும் சரி.. ஆனைமுத்து எனும் கிழவனும் சரி.. செய்துவிட்டு போன பணிகளால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்..ஏனெனில் நாய்களோடும் நரிகளோடும் பெரும் போராட்டம் நடத்துகிறோம்..ஒரு காலை நாய் கடிக்குது.. இன்னொரு காலை நரி கடிக்குது.. பெரியார் எனும் கிழவன் ஏன்தான் பிறந்து இப்படி சமூக சீர்திருத்தம் செய்தாரோ என நினைக்கத் தோன்றும் அளவுக்கு பேசுகின்றனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications