ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து, திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவகங்கை திருப்பத்தூர் தொகுதிக்குரிய தபால் வாக்கு, தவறுதலாக திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டதால், அதனை மீண்டும் கணக்கில் சேர்த்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பெரியகருப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றிருந்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் 5,000-க்கும் குறைவான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றிருந்தது. குறிப்பாக திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளர் சீனுசாமி சேதுபதி ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முன்னாள் திமுக அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தார்.
காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வைத்து திருப்பத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் முன்னிலையில் இருந்து வந்தார். இதனால் முதலில் திமுக ஆதரவாளர்கள் உற்சாகமாக இருந்தனர். எளிதாக வெற்றி பெறுவார் என நினைத்த நிலையில் அக்கட்சியினருக்கு நேரம் செல்ல செல்ல பெரிய ஷாக் காத்திருந்தது.
மொத்தமுள்ள 27 சுற்றுகளில், 20-வது சுற்று வரை த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதியை விட பெரியகருப்பன் சுமார் 5 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார். ஆனால் கடைசி 7 சுற்றுகளில் பதிவான வாக்குகள் திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 27-வது சுற்றில் பெரியகருப்பன் 81,641 வாக்குகளும், சீனிவாச சேதுபதி 82,247 வாக்குகளும் பெற்றிருந்தனர். அப்போது கீரச்சிவல்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை, ஆலம்பட்டி ஆகிய பகுதிகளுக்கான 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகி கிடந்தது.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்தது. இறுதியாக த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 ஓட்டுகளும், தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் 83,374 வாக்குகள் வாங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வெற்றிச் சான்றிதழும் வழங்கப்பட்டது. எனினும் தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவகங்கை திருப்பத்தூர் தொகுதிக்குரிய தபால் வாக்கு, தவறுதலாக திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டதால், அதனை மீண்டும் கணக்கில் சேர்த்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பெரியகருப்பண் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே நெல்லை ராதாபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications