சீமான் வீடு முற்றுகை- பாதுகாப்புக்காக உருட்டுக்கட்டைகளுடன் நின்ற நாதக ஆண்,பெண் நிர்வாகிகள்!
சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்தியதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு முற்றுகையிடப்படும் என 30க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகள் அறிவித்து போராட்டம் நடத்தின.. இந்த நிலையில் சீமான் வீட்டுக்கு பாதுகாப்பாக நேற்று இரவு முதலே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் சீமான் வீடு முன்பாக குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
தந்தை பெரியாரை இழிவு செய்ததற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு இன்று முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திக, திவிக, மே 17 இயக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இதனையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இன்னொரு பக்கம் சீமானின் விமர்சனம் நியாயமானது; பெரியார் ஒழுக்கமற்றவர் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் சீமான் வீட்டை முற்றுகையிடுவோர் தமிழரல்லாதாவர்கள்; சீமானை முன்வைத்து தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க சதித் திட்டம் தீட்டுவதாகவும் கூறியிருந்தனர்.

மேலும் சீமான் வீட்டை முற்றுகையிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் சீமான் வீடு முன்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு முதலே குவிந்தனர். சீமான் வீட்டை முற்றுகையிடுவதைத் தடுக்கும் வகையில் அணிவகுத்தும் நின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஆண், பெண் நிர்வாகிகள் சிலர் கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றனர். அப்போது, எங்களைத் தாக்க முயன்றால் நாங்கள் பதில் தாக்குதல் நடத்துவோம்; அதற்காகவே உருட்டுக்கட்டைகளுடன் நிற்கிறோம் எனவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications