Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பெரியார் சாதிகளை ஒழித்தாரா.. எத்தனை சாதியை ஒழித்தார்".. ஈழத் தமிழரின் அதிர வைக்கும் கேள்வி!

பெரியார் குறித்து இலங்கை தமிழர் உமாகரன் ராசய்யா கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பெரியார் இதுவரைக்கும் எந்த சாதியை ஒழித்துவிட்டு போனார்? அவர் எந்த சாதியை ஒழிச்சார்னு சொன்னால் அவரை பற்றி பேசுவதில் பொருள் உள்ளது.. மற்றபடி அது பேசுபொருளே இல்லை.. " என்று இலங்கை தமிழர் உமாகரன் ராசய்யா ததெரிவித்தள்ளார்.. இவரது இந்த வீடியோவை ஏகப்பட்ட பேர் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே, அதாவது மத்திய பாஜக அரசு ஏதாவது இந்துத்துவ கொள்கை திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது என்றால், அதற்கு முதல் எதிர்ப்பு குரல் தமிழகத்தில் இருந்துதான் எழும்... அப்போது சோஷியல் மீடியாவில் அதிகமாக உச்சரிக்கப்படும் சொல் "பெரியார் மண்" என்பதுதான்.

periyar: sri lankan tamils umagaran rasaiyaa says about periyar

பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும், அந்த சித்தாந்தங்களுடன் திராவிட கட்சிகளால் முழுமையாக ஒத்து போகாததற்கு காரணமும் பெரியார் என்ற நபர்தான்.. அவரின் சிந்தனைதான்..

பொதுவாக பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்ற ஒரு வட்டத்தில் அவரை சமூகம் அடைத்துவிட்டதையும் மறுக்க முடியாது.. ஆனால் பெரியாரின் பரிமாணங்கள் அளவில்லாதது.. அந்த கால திராவிட இயக்கத் தலைவர்களால் மனசார ஏற்று கொள்ளப்பட்டது.. இப்போதும் பெரியாருக்கு ஒரு அழுக்கு என்றால் அனைத்து கட்சிகளுமே பொங்கி வருகிறார்கள் என்றால், பெரியார் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தி என்பதால்தான்! இது அதிமுக, திமுக உள்ளிட்ட எல்லாருக்குமே பொதுவான கருத்து!

ஆனால் சமீப காலமாக பாஜக சற்று தீவிரத்தை கையில் எடுத்துள்ளது.. எப்போதெல்லாம் தமிழகத்தில் தீர்க்க முடியாத பிரச்சனை, எழுகிறதோ அப்போதெல்லாம் கையில் எடுக்கப்படும் ஆயுதம் பெரியார் கொள்கைதான்.. அன்றைய தினம் நள்ளிரவு ஏதாவது பெரியார் சிலையை உடைத்தும் வைத்திருப்பார்கள்.

தற்போதும் அதே பிரச்சனை எழுந்து வருகிறது.. எதையாது கிண்டி அரசியல் செய்யும் சிலருக்கு பெரியார்தான் உதவி கொண்டுள்ளார்.. பெரியார் குறித்த கருத்துக்கள், எதிர் கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டுமிருக்கின்றன.. அந்த வகையில், ஒரு சேனலில், இலங்கை தமிழர் உமாகரன் ராசய்யா என்பவரிடம் பெரியார் குறித்த கேள்வி எழுப்பப்படுகிறது.. அவரை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது.

அதற்கு ராசய்யா பதில் சொல்லும்போது, "பெரியார் இதுவரைக்கும் எந்த சாதியை ஒழித்துவிட்டு போனார்? இதுக்கு யாராவது பதில் சொல்வதாக இருந்தால், அதை பற்றின விவாதங்களில் ஈடுபடலாம்.. அந்த கேள்விக்கே இன்னும் பதில் தெரியாதபோது, பெரியார் பற்றின விஷயங்களை பேச அவசியமில்லாத ஒன்று.. அவர் எந்த சாதியை ஒழிச்சார்னு சொன்னால் அவரை பற்றி பேசுவதில் பொருள் உள்ளது.. மற்றபடி அது பேசுபொருளே இல்லை.. " என்று பதிலளித்துள்ளார்.

ராசய்யாவின் இந்த வீடியோவை ஏகப்பட்ட பேர் சோஷியல் மீடியாவில் வைரலாக்கியும் வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+