"ஆரியர்கள் வந்தேறிகள்" நச்சு கருத்தை திணிக்க முயற்சித்தார் பெரியார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரியர்களை வந்தேறிகள் என்பதை இங்கே திணிக்க முயற்சித்தவர் பெரியார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆரியர்கள் மிகவும் அறிவுப்பூர்வமானவர்களாக இருந்தார்கள் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல் சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சிந்து சமவெளி நாகரிகம் சார்ந்த பண்பாடு, மக்கள் மற்றும் தொல்பொருள் மீதான பார்வைகள், தொல்பொருளியல் மீதான பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், உலகில் 3 இனங்களாக பாகுபாடுகள் இருக்கின்றன.

RN Ravi Governor Aryans

முதல் வெள்ளை நிறம், 2வது மஞ்சள் மற்றும் 3வது கருப்பரினம். இதில் மிகவும் உயர்ந்தவர்களாக வெள்ளை இனத்தவரை கருதுகிறார்கள். 1850களில் நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடு இருந்தது. வினஸ்டன் சர்ச்சில் மற்ற இனத்தினரை நாய்கள் போல் கருதினார். ஆரியர் என்று இனப் பாகுபாடு காட்டியவர் மேக்ஸ் மில்லர்.

ஆரியர் என்ற ஒன்று இல்லை என தமிழ்ச் சங்க நூல்கள் சொல்கின்றன. ஆரியர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், தமிழ்நாட்டில் சில நூல்களை எழுதுகிறார்கள். நச்சு விதையை பரப்புகிறார்கள். இந்தியாவில் மேற்கத்திய நாகரிகங்களை திணிக்க முயற்சிகள் நடைபெற்றது. தமிழும், சமஸ்கிருதமும் இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் தொன்மையான சிறந்த மொழிகள்.

ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்த போது இந்தியாவில் நாகரிகங்களில் சிறந்த நாகரிகங்களாக இருந்தன. மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்து ஏராளமானவை உள்ளன. ரிக் வேதத்தில் அனைவரும் சமம் என்றும், அனைவரும் ஒரே குடும்பம் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆரியர்களை வந்தேறிகள் என்று கூறியவர் ஈ.வே.ராமசாமி.

அதனை மக்கள் மத்தியில் திணிக்க முயற்சித்தவர். ஆரியர்கள் என்பவர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள். கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள். சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+