விஜய்க்கும் அனுமதி கொடுக்கல.. இப்போ பேரணிக்கும் அனுமதி இல்லை.. தேமுதிக மீசை ராஜேந்திரன் ஆதங்கம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அக்கட்சி சார்பில் இன்று அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. எனினும் போலீசாரின் தடையை மீறி அமைதிப்பேரணி நடந்து முடிந்தது. இந்த நிலையில், அரசியல் காரணத்தால் தான் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், விஜய்க்கும் விஜயகாந்துக்கும் மட்டும் தான் இப்படி செய்கிறார்கள் என்றும் தேமுதிக மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நினைவுதினத்தை குருபூஜையாக கடைப்பிடிக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முடிவு செய்தார். அதன்படி இன்று அரசியல் தலைவர்களுக்கும் தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக அக்கட்சி சார்பில் இன்று அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டு அதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிகவின் அமைதிப்பேரணிக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது.
தடையை மீறி அமைதிப்பேரணி
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தை சொல்லி அனுமதி வழங்கவில்லை. இதனால் தேமுதிகவினர் சென்னை கோயம்பேட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாருடன் தேமுதிகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசார் அப்போதும் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
எனினும் போலீசாரின் தடையை மீறி தேமுதிகவினர் பேரணியை தொடங்கினர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் எல் கே சுதீஷ், விஜயபிரபாகரன், தொண்டர்கள் என அனைவரும் கருப்பு உடை அணிந்து பேரணி செல்கிறார்கள். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் விஜயகாந்த் சிலைக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தேமுதிக மீசை ராஜேந்திரன்
இந்த நிலையில், எல்லோருக்குமான பிடித்த தலைவருக்கு அமைதிப்பேரணி நடத்துவதற்கு கூட போலீசார் அனுமதி தரவில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் இப்படித்தான் அனுமதி தர மறுத்தார்கள் என்றும் தேமுதிக மீசை ராஜேந்திரன் கூறினார். அவர் கூறியதாவது:-
எல்லோருக்கும் பிடித்தமான ஒரு தலைவர், நடிகர், மனிதர் விஜயகாந்த். மற்ற கட்சிகளுக்கு எல்லாம் அனுமதி கொடுக்கிறாங்க.. எல்லோரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். சட்டப்படி என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்தோம். ஆனாலும் அமைதிப்பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை.
விஜய்க்கும், விஜயகாந்துக்கும் மட்டும் இப்படி
அரசியல் காரணத்தால் தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்றால் அவங்களுக்கு எல்லாம் அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். நம்ம தவெக தலைவர் விஜய் மாநாடு நடத்த வேண்டும் என்றால் கொடுக்க மாட்டேங்கிறாங்க.. ஆனால் ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருந்தால் அவங்களுக்கு அனுமதி கொடுத்துவிடுகிறார்கள்.
எனவே நிச்சயமாக இந்த விஷயத்தில் அரசியல் இருக்கிறது என்று நாங்க நினைக்கிறோம். எல்லோருக்குமே பிடித்த தலைவர் விஜயகாந்த். எல்லருோக்குமே உதவி செய்யக்கூடியவர். எந்த தலைவரோடு நினைவாலயத்துக்கு போனாலும் சமாதி, நினைவாலயம் என்று தான் சொல்லுவாங்க. ஆனால் விஜயகாந்துக்கு மட்டும் தான் ஆலயம் என்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications