மாற்றுத்திறனாளிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க! அரசின் அசத்தல் அறிவிப்பு!
சென்னை: அரசின் 5 முக்கிய உதவித் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மூலம் இப்போது பதிவு செய்யலாம் என்றும் விண்ணப்பங்களை பதிவு செய்யும் நடைமுறை தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்பினை உருவாக்கவும், அவர்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு; தமிழ்நாடு மின்ஆளுமை முகமை (TNeGA) மூலமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஐந்து திட்டங்களான

1) கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
2) உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம்
3) வங்கி கடன் மானிய விண்ணப்பம்
4) திருமண உதவித் தொகை விண்ணப்பம்
5) மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகியன இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications