பெருங்களத்தூருக்கு போன ஹேப்பி நியூஸ்.. தாம்பரம் ரோட்டுல "அதை" பாத்தீங்களா? ஒரே பரபரப்பு போல
சென்னை: சென்னையின் நாலாபுறமும் கடந்த 2 நாட்களாகவே பலத்த மழை கொட்டிய நிலையில், தாம்பரம் பகுதி மக்கள் மட்டும் பெருத்த நிம்மதியில் உள்ளனர்.. என்ன காரணம்?
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.. தென் மாவட்டங்களில் அந்த அளவுக்கு மழை இல்லையென்றாலும், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னை மழை: சென்னையின் புறநகரில் தாம்பரம், முடிச்சூர், வண்டலூர், பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும்போதெல்லாம் மழைநீரால் சிக்கல் வந்துவிடுகிறது. இப்படித்தான் கடந்த மாதமும் பெய்த மழையால், தாம்பரத்தில் மேற்கு பகுதியில் இருந்து, கிழக்குப்பகுதிக்கு செல்லும் சுரங்கப்பாதை முழுவதுமே மழைநீரால் தேங்கியது..
அதிலும், குறிப்பாக, செம்பாக்கம், திருமலைநகர், மகாகணபதி தெரு, மகா சக்தி நகர், மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், அங்குள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் சுற்றிலும் தேங்கி விட்டதால், வீடுகளை விட்டு மக்களால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது..
இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார். உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை, விரைந்து அனுப்பி உத்தரவிட்டார்.. பழைய ஜிஎஸ்டி சாலை சாலையிலும் இந்த பணி தொடர்ந்தது..
மழைநீர் பாதிப்பு: அதுமட்டுமல்ல, மழைநீர் பாதிப்பு குறித்து, பொதுமக்களோ, சமூக அலுவலர்களோ, உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அழகுமீனா அப்போதே நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போதும் நேரடி ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், செம்பாக்கம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று வரை கனமழை கொட்டியது.. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதிலும், 3வது மண்டலம் 39வது வார்டு, திருமலை நகர் பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அதிப்பட்டனர்..
பீர்க்கன்காரணை பகுதி, பெருங்களத்தூர், குறிஞ்சி நகர், சேலையூர், 65வது வார்டு லட்சுமி நகர் விரைவு பகுதி, குரோம்பேட்டை, நடேசன் நகர் பகுதிகளில் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
அழகுமீனா: இதையடுத்து, மழைநீர் தேங்கிய பகுதிகளில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.. தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
பிறகு அழகுமீனா சொல்லும்போது, "தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகளில் 110 தெருக்களில் சாலை உயர்த்தப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது... வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அந்த வேலைகள் இப்போது முடிந்து விட்டதால், உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் செய்து முடிக்கப்படும்" என்று உறுதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications