மதத்துவேஷம் செய்தால் தடுப்புக்காவலில் கைது: முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் பரபர கடிதம்
சென்னை : தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மத துவேஷத்தை வளர்க்க முயற்சிக்கின்றனர். மக்கள் மத்தியில் வெறுப்பு விதைகளை தூவுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஓய்வே இல்லாமல், ஒவ்வொரு விநாடியும் தமிழகத்தின் வளர்ச்சியை தவிர வேறு சிந்தனையே இல்லாமல் உழைத்து வருகிறீர்கள். தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்திய எல்லைகளையும் தாண்டி, சர்வதேச நாடுகளிலும் தங்களது நிர்வாக சிறப்பையும், மக்கள் நலம் சார்ந்த தங்கள் அரசின் அணுகுமுறைகளையும் பாராட்டி மகிழ்கிறார்கள்.

ஸ்டாலின் தலைமை
அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் உங்களது புதிய நிர்வாக முயற்சிகளையும், அனைவரையும் அரவணைத்து செல்லும் ஜனநாயக பெருந்தன்மையையும் பார்த்து வியப்படைவதோடு மட்டுமல்லாமல், தங்களது சீரிய தலைமையின் கீழ், தமிழகம் தென்கிழக்கு ஆசியாவின் முதலீட்டு மையமாக விரைவில் மாற உள்ளது என்று உறுதிபட தெரிவிக்கின்றனர்.

சிலர் விரும்பவில்லை
தங்களது தலைமையில் பீடுநடைபோடும் தமிழகத்தின் வெற்றி பயணத்தை விரும்பா சிலர் இந்த ஆட்சியின் முனைப்யையும், கவனத்தினையும் சிதறடித்து திசை திருப்ப முயற்சிக்கின்றனர். சாதி, மதம், மாவட்டம் ஆகிய எல்லைகளுக்கு அப்பால் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் தமிழர் என்ற ஒரே அடையாளத்தோடு ஒன்றிணைக்கவும், ஒற்றுமைப்படுத்திடவும் தாங்கள் எடுக்கின்ற முயற்சிகள் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளன.

அதிகார கனவு
இதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள சிலர் தங்களது அதிகார கனவை நிறைவேற்றுவதற்காக தமிழர்களை சாதியின் பெயராலும், பிராந்தியத்தின் மதத்தின் பெயராலும் பிரித்தாழ சதி திட்டம் தீட்டி வருகின்றனர்.

வெறுப்பு விதைகள்
மக்கள் மத்தியில் மத துவேஷத்தை வளர்க்க முயற்சிக்கின்றனர். மக்கள் மத்தியில் வெறுப்பு விதைகளை தூவுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை தங்களது அரசு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அப்படிப்பட்டவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், தடுப்பு காவல் சட்டத்தில் கூட கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications