வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளதாக தமிழக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்

petition on HC: seek to Committee headed by a retired judge to track the status of domesticated elephants

இந்த யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய கடந்த 2016-ம் ஆண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது..

இந்த குழு வளர்ப்பு யானைகளின் உரிமையை முறையாக பராமரிக்கவில்லை என்றும் வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமண்ட் ரூபின் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வு, யானைகள் தொடர்பான வழக்கு வேறோரு அமர்வில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+