பாஜகவில் பொறுப்பில் இல்லை- ‘பெட்ரோல் குண்டு’ கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வக்கீல் பரபர விளக்கம்!
சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார் தாம் பாஜகவில் எந்த பொறுப்பும் வகிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார் பட்டேல் சாலையில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் புயலையும் கிளப்பி இருக்கிறது.கருக்கா வினோத்தை ஜாமீனில் வெளியே எடுத்தது யார் என்பது பெரும் விவாதமாக நடைபெற்று வருகிறது.

ஆளுநர் மாளிகை விமர்சனம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த சென்னை போலீசார், சர்தார் பட்டேல் சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது; உடனடியாக ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர் என தெரிவித்தனர். ஆனால் ஆளுநர் மாளிகையோ, ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்து போகச் செய்துவிட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக் கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்னரே கொல்லப்பட்டுவிட்டது என குற்றம்சாட்டி இருந்தது. இதனை சென்னை போலீசார் மறுத்தும் இருந்தனர்.
அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு: இந்நிலையில் தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தமது எக்ஸ் பக்கத்தில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது என பதிவிட்டிருந்தார்.
பாஜக பதில்: இதற்கு தமிழ்நாடு பாஜக மறுப்பு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார். அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் ஜாமினில் எடுத்துள்ளது இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது எனவும் குற்றம் சாட்டி இருந்தது.
வழக்கறிஞர் விளக்கம்: இந்த நிலையில் ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அளித்த விளக்கம்: பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்ட ஒருவரை பாஜக வழக்கறிஞராக நான் இருந்து ஜாமீனில் எடுத்திருந்தால் பாஜகவினர் இந்நேரம் பிரச்சனை செய்திருக்கமாட்டார்களா? நான் எந்த பொறுப்பிலும் அந்த பார்ட்டியில் கிடையாது. 2020-ல் நான் அந்த ஏரியா வழக்கறிஞர் என்பதால் என் பெயரை கட்சி நிர்வாகிகள் பட்டியலில் சேர்த்திருந்தாங்க. அதன் பின்னர் நான் காண்டாக் பண்ணி, என்னை பொறுப்பில் இருந்து எடுத்துடுங்க.. நான் பார்ட்டியில் எல்லாம் கிடையாதுன்னு சொன்னேன்.. அதனால எடுத்துட்டாங்க.. கடந்த 2 ஆண்டுகளாகவே பாஜகவில் நான் பொறுப்பில் இல்லை. ஆனால் நான் வழக்கு நடத்தி இருக்கிறேன். அது சார்ந்த வழக்கு நடத்தி இருக்கிறேன்.. கம்யூனிஸ்ட் கட்சியினருக்காக வழக்கு நடத்தி இருக்கிறேன். ஒரு வழக்கறிஞர்.. .ஒரு வழக்காளி இந்த உரிமையில்தான் வழக்கை நடத்தி இருக்கிறேன். ஒரு வழக்கறிஞராக வழக்கு சம்பந்தமாகதான் எனக்கு தெரியும். மற்றபடியான குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் தெரியாது. இவ்வாறு வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
-
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications