பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம்
சென்னை: வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள் விலையை உயர்த்தி வருகின்றன. சில நாடுகள் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு காரணமாக பயன்பாட்டை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன் விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்..
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலை தொடங்கின. இந்த போர் காரணமாக உலகின் முக்கியமான நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. பல்வேறு கப்பல்கள் அந்த பாதையை கடக்க முடியாமல் நிற்கின்றன. இதனால் உலகம் முழுவதுக்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் விலையும் அதிகமாகி உள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, இலங்கை உள்பட பல்வேறு நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்தி உள்ளன. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிகளை உலக நாடுகள் கையில் எடுத்துள்ளன. குறிப்பாக நிலக்கரி பயன்பாட்டை அதிகரித்துள்ளன. அதேபோல் மின்சார பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு, வேலைநேரம் குறைப்பு, அத்தியாவசிய தேவைகள் தவிர பிற வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதில் கட்டுப்பாடு என பல்வேறு வழிகளை உலக நாடுகள் பின்பற்றுகின்றன.
பாகிஸ்தான்
பெட்ரோல், டீசல் கையிருப்பு சில வாரங்களுக்கு மட்டுமே உள்ளதால், வாரத்தில் 4 நாள் வேலை வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு 'Work from Home' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு எரிபொருள் படி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மியான்மர் மற்றும் கம்போடியா
எரிபொருள் வாங்க வருபவர்களுக்கு க்யூஆர்கோடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதியிலும், இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படை தேதியிலும் மட்டுமே இயக்க மியான்மர் அரசு உத்தரவிட்டுள்ளது. கம்போடியாவிலும் இதேபோன்ற நடைமுறைதான் இருக்கிறது
இலங்கை
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு 'எரிபொருள் பாஸ்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. அத்தியாவசிய பணி அல்லாத ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம்
மார்ச் 8 முதல் எரிபொருள் ரேஷன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட அளவு மட்டுமே ஒவ்வொரு வாகனத்திற்கும் பெட்ரோல் வழங்கப்படுகிறது. மின்சாரத்தைச் சேமிக்க தொழிற்சாலைகளுக்குச் சுழற்சி முறையில் 5 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. கேஸ் பற்றாக்குறையால் உரத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
தாய்லாந்து
அரசு அலுவலகங்களில் ஏசி வெப்பநிலையை 26-27°C ஆக வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோட் சூட் அணிவதைத் தவிர்த்து டி-ஷர்ட் அணிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸ்
"தேசிய எரிசக்தி அவசரநிலை" பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 4 நாள் வேலை வாரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை எந்த கட்டுப்பாடும் இதுவரை இல்லை.. இருப்பினும் சில சவால்கள் உள்ளன: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் முற்றாக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வணிக சிலிண்டருக்கு மட்டும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதால், இப்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு ரேஷன் முறை வரவில்லை. ஆனால், மக்கள் பீதி அடைந்து ( ஒரே நேரத்தில் வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் மாதம் முதல் டீசல் மற்றும் பெட்ரோல் ரேஷன் முறை வரக்கூடும் என 'ஷெல்' நிறுவனம் எச்சரித்துள்ளது. இதேபோல் சர்வதேச எரிசக்தி நிறுவனம் தனது உறுப்பு நாடுகளிடம் இருந்து 40 கோடி பேரல் எண்ணெயை அவசரத் தேவைக்காகச் சந்தையில் வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி ஏஜென்சி நிறுவனம் உலக நாடுளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
முடிந்தவரை Work from Home முறைக்கு மாறவும்.
நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை தற்போது உள்ள வேகத்தில் இருந்து குறைந்தது 10 கி.மீ வரை குறைக்கவும் (எரிபொருள் மிச்சமாகும்).
பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்கப்படுத்தவும்.
பெரிய நகரங்களில் ஒற்றை-இரட்டை இலக்க வாகனப் பதிவு முறையைப் பயன்படுத்தவும்.
கார்கள் ஷேரிங்கை ஊக்குவிக்க வலியுறுத்தி உள்ளது. மின்சார வாகனங்களுக்கு மாறவும் வலியுறுத்தி உள்ளது.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?














Click it and Unblock the Notifications